ஏகே-61-ல் அதிரடி மாற்றம்! வலிமை கூட்டணி உடைகிறதா?

மூன்றாவது முறையாக 'ஏகே-61' படம் மூலம் இணையும் அஜித், வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2022, 02:48 PM IST
  • வலிமை திரைப்படம் 00 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றது.
  • ஜீ5 ஓடிடி-ல் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பதிவு செய்து வெற்றிபெற்றது.
  • ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.
ஏகே-61-ல் அதிரடி மாற்றம்! வலிமை கூட்டணி உடைகிறதா? title=

கடந்த பிப்ரவரி மாதம் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படம் 'வலிமை'.  ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றது.  திரையரங்குகளில் இப்படம் வெற்றி பெற்றதோடு ஓடிடி தளத்திலும் இதுவரை எந்த படமும் பெறாத வெற்றியை இப்படம் பெற்றது.  ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் வெளியான இந்த படம் சில நிமிடங்களில் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பதிவு செய்து வெற்றிபெற்றது.

மேலும் படிக்க | 4 கார் இருக்கும்போது சைக்கிள்ல போனது ஏன்?- விஜய் பதில்?!

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜீத், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் கூட்டணி மூன்றாவது முறையாக 'ஏகே 61' படத்தின் மூலம் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது.  வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் இப்படத்தின் பெருமபாலான காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்னும் ஓரிரு வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.  இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னர் ரசிகர்கள் வலிமை படம் குறித்து அப்டேட் கேட்டு இணையத்தில் குரல் எழுப்பிவந்த நிலையில் தற்போது 'ஏகே 61' குறித்த தகவல்களை கேட்டு  வருகின்றனர்.  இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது இந்த பிரபல கூட்டணியோடு ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவர் கோலி சோடா போன்ற பல படங்களில் சிறப்பாக பணியாற்றியதோடு, மலையாளத்தில் 'ஜல்லிக்கட்டு', 'ஐயப்பனும் கோஷியும்' மற்றும் 'பீஷ்ம பர்வம்' ஆகிய படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார்.  மேலும் வலிமை படத்தில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்து தந்த திலீப் சுப்பராயன் 'ஏகே 61'ல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் கால்ஷீட் சிக்கல்கள் இருப்பதால் அவர் இப்படத்தில் பணிபுரிவார என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ajith

மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News