அஜித் ரசிகர்கள் பாலை திருடலாம் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

வலிமை படம் ரிலீஸாவதையட்டி அஜித் கட்அவுட்டுக்காக அவரது ரசிகர்கள் பாலை திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:17 PM IST
  • பால் முகவர்களுக்கு எச்சரிக்கை
  • அஜித் ரசிகர்கள் பாலை திருடலாம்
  • இரவுப் பணியில் ஈடுபட அறிவுறுத்தல்
அஜித் ரசிகர்கள் பாலை திருடலாம் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை  title=

இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், "முன்னணி நடிகர்கள் படம் ரிலீஸாகும்போது உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடிதம் எழுதியிருக்கிறோம். கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!!

நடிகர்கள் உள்ளிட்டோர் இது குறித்து துளியளவு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. கடந்த காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பால் முகவர்களின் கடைகள் முன்பு இருந்த பாலை ரசிகர்கள் திருடிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன என்பதால், வியாழக்கிழமை நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. அதனால், திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய, அவரது ரசிகர்கள் பால் முகவர்களின் கடைகளில் பாலை திருடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இதனால், இதுபோன்ற நேரங்களில் பால் முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையை மட்டும் நம்பிக்கொண்டு, குறைசொல்வதில் அர்த்தமில்லை. நாளை நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை பால்முகவர்கள் சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை தற்காத்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் என்ற போர்வையில் யாரேனும் பாலை திருட முயற்சி செய்தால், அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்து CSR ரசீதை சங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | த்ரிஷ்யம் கூட்டணியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News