தமிழில் வெகு சில படங்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சர்ட் ரிஷி. தமிழ், தெலுங்கு மற்றும் சில மலையாள, கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகை ஷாலினியின் சகோதரர் ஆன இவர் அஜித்தின் மச்சான் ஆவார். இவர், நடிகை யாஷிகா ஆனந்தை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாஷிகா ஆனந்த்…
தமிழில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ மற்றும் ‘துருவங்கள் 16’ படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு மாடலாக தொடங்கிய இவருக்கு, சினிமா அறிமுகத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து படங்களிலும் கவர்ச்சியாக தோன்றும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் ஜாம்பி போன்ற படங்களில் கொஞ்சம் கூடுதல் அழகுடன் இருப்பார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இவருடன் காரில் பயணித்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். பின்னர் மீண்டு வந்தார். யாஷிகா, தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | Sharwanand: ஒரு வாரத்தில் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய நடிகர்..நிலைமை என்னாச்சு?
ரிச்சர்ட்-யாஷிகா காதல்?
திரெளபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நடித்தவர், ரிச்சர்ட் ரிஷி. குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்து பின்னர் நாயகிகளாக வளர்ந்த ஷாலினி மற்றும் ஷாமிலியின் சகோதரர் இவர். தமிழின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்குமாரின் மச்சானும் இவர்தான். ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் அதன் பிறகு இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. சில படங்களில் சாதிய கொள்கையை இவர் பரப்புவதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் யாஷிகாவும் ரிச்சர்டும் காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
நடிகரின் பதிவு:
ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்தை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அவர் இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில், Sun Kissed என்பது போல சூரிய ஒளியில் யாரோ ஒரு பெண் அவரது கண்ணத்தில முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு சில மணித்துளிகளில் யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். இதனால் இவர்களின் காதல் கதையை நடிகர் உறுதிசெய்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
கண்ணதாசன் பேத்தியை திருமணம் செய்ய இருந்தவர்..
தற்போது யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக கூறப்படும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி, இதற்கு முன்னர் கண்ணதாசனின் பேத்தியான சத்தியலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல் மருத்துவரான சத்தியலட்சுமி கண்ணதாசன், சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில் திருமணம் நின்று போனது. ரிச்சர்ட் ரிஷியும் படங்களில் நடிப்பதில் இருந்து காணாமல் போனார். தற்போது தன்னை விட 22 வயது இளைய நடிகையை இவர் காதலித்து வரும் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | சுந்தர் சி படத்தில் பிகினியில் போஸ் கொடுக்கும் இளம் நடிகை பலக் லால்வானி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ