தமிழில் கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் கைதி. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதையடுத்து தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இப்படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.