புதுடெல்லி: தற்போது அஜித் குமார் (Ajith Kumar) நடித்து வரும் "வாலிமை" (Valimai) படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் "பைக் ஸ்டண்ட்" செய்யும் போது அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், நடிகர் அஜித் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மேலும் #GetWellSoonThala என்ற ஹெஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அதில் சீக்கிரம் திரும்பி வர வேண்டும் என ஏராளமாக ட்வீட்டுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.
அஜித்தின் "தல 60" படமான வலிமை பற்றி வெளியான தகவல்கள் உண்மையா?
அஜித் காயமடைந்த போதிலும், முழு காட்சிகளையும் நடித்து கொடுத்துவிட்டு, சரியான நேரத்தில் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டன என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஊடகம் கூறுகையில், "அஜித் ஒரு பைக்-சேஸ் காட்சி எடுக்கப்பட்ட போது வாகனம் சறுக்கியதால், அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்ப்பட்டன. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான், அஜித் ஒரு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். அதன் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வலிமை" (Valimai) படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் படமான "நேர்கொண்ட பார்வை" படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அஜித் நடித்து வரும் அடுத்தப்படம் தான் "வலிமை" ஆகும்.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் நியூ அப்டேட்
"வலிமை" படத்தை நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.