கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன் மற்றும் ஸ்னேகா ஆகியோரது நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான 'பிரிவோம் சிந்திப்போம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயலட்சுமி. இதனைத்தொடர்ந்து இவர் கோரிப்பாளையம், அலைபேசி, வேட்டைக்காரன், முத்துக்கு முத்தாக, அப்பா மற்றும் விசாரணை போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர மேலும் சில சின்னத்திரை தொடங்களிலும் ஜெயலட்சுமி நடித்திருக்கிறார். இவர் தற்போது பாடலாசிரியரும், பைக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமான சினேகன் மீது போலீசில் புகைரளித்து இருக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் பாடலாசிரியர் சினேகன் 'சிநேகம்' என்கிற அறக்கட்டளை நடத்தி வருகிறார், இதன்மூலம் பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். சமீப காலமாக தனது அறக்கட்டளையின் பெயரை யாரோ பயன்படுத்தி பணமோசடி செய்துவருவதாக சினேகன் கூறி வந்தார். மேலும் இணையதளத்தில் கட்டப்பட்ட பணமோசடி செய்தவரின் முகவரிக்கு விளக்கம் கேட்டு சினேகன் இரண்டு தடவை கடிதம் எழுதியதபோது அதற்கு பதில் வரவில்லையென்றும், பின்னர் முகவரியில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டபோது நேரில் சந்திக்குமாறு ஒரு முகவரியை கொடுத்ததாகவும், ஆனால் அந்த முகவரியில் சென்று பார்த்தால் அது பொய்யான இடமென்றும் தெரிய வந்ததாக சினேகன் புகாரளித்திருந்தார்.
மேலும் படிக்க | கமலுடன் கரம்கோர்க்கும் கட்டப்பா! இந்தியன் 2 அதிரடி அப்டேட்
மேலும் சினேகன், இந்த மோசடி வேலையை செய்தது நடிகை ஜெயலட்சுமி தான் என்றும், அவரது மகளின் பெயரில் வங்கிக் கணக்குகளை இணையத்தில் வெளியிட்டு, சிநேகம் அறக்கட்டளைக்காக பொதுமக்களிடம் பணம் பெற்று வருவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் சினேகன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி, சினேகன் தனது பெயரில் தவறான தகவல்களை பரப்பி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக சினேகன் மீது புகார் அளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க | கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ