Ghilli vs Thalapathi Re Release : 2024ஆம் ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியானது. இதில் ஒரு சில மட்டும்தான் ரசிகர்களின் மனதிலும் பாக்ஸ் ஆபீஸிலும் இடம்பெற்றன. இதைத் தாண்டியும் ரீ ரிலீஸ் ஆன சில படங்களும் கூட, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அப்படி வளர கவனத்தை ஈர்த்த 2 படங்கள், கில்லி மற்றும் தளபதி.
கில்லி ரீ-ரிலீஸ்:
நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று, கில்லி. தெலுங்கில் ஒக்கடு என்ற பெயரில் வெளியான இந்த படத்தை, சில மாற்றங்கள் செய்து ‘கில்லி’ என்ற பெயரில் எடுத்து, அதில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்தனர். 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். வில்லனாக, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இப்படம், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வெளியானது.
கில்லி படம், ரிலீஸாகும் போது கூட இவ்வளவு பெரிய கொண்டாட்டம் இருந்தததா என்பது தெரியவில்லை. ஆனால், மறு வெளியீட்டின் போது மக்கள் இப்படத்தை எப்படி கொண்டாடினார்கள் என்பதை பார்க்க வேண்டுமே, அப்பப்பா! கில்லி படத்தை, கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் முறை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருப்பார்கள் அப்படி இருந்தும், இதனை தியேட்டரில் பார்க்க, அதிலும் முதல் நாள் முதல் காட்சிக்கே அத்தனை பேர் திரையரங்குகளை நோக்கி படை எடுத்தனர்.
எந்த காட்சிக்கு அடுத்து எந்த காட்சி வரும் என்பதும், அந்த காட்சியில் யார் என்ன செய்வார்கள் என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். இருந்தாலும், இதனை குடும்பமாக சென்று பலர் பார்த்தனர். இதில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடனமாடி, குதூகலித்தனர்.
தளபதி ரீ-ரிலீஸ்:
ரஜினியின் இத்தனை வருட திரை வாழ்க்கையில் எத்தனையோ படங்கள் நினைவில் நிற்குமாறு வந்திருந்தாலும், அதில் முத்தான இடத்தை பிடித்த படமாக இருக்கிறது, தளபதி. இப்படத்தின் பெயரை கேட்டாலே, “நண்பன்னா என்னன்னு தெரியுமா? சூர்யான்னா என்னன்னு தெரியுமா?” என ரஜினி மம்மூட்டியை பார்த்து சொல்லும் டைலாக்தான் பலருக்கு நினைவிற்கு வரும். 90s கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல 2k கிட்ஸ்களும் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பலர் கூறுவர்.
மகாபாரத கதையை, கொஞ்சம் மறு உருவாக்கம் செய்து, நிகழ்கால கதையாக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ரஜினி-மம்மூட்டியுடன் சேர்ந்து ஷோபனா, அரவிந்த் சாமி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கில்லி படம், எப்படி குடும்ப ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டதோ, அதே போல தளபதி படமும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படம், சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியானது.
இளையராஜாவின் இசை மழை, ரஜினி-மம்மூட்டியின் கைதேர்ந்த நடிப்பு என பல அம்சங்கள் நிறைந்த இந்த படம், முதல் முறை வெளியான 1991ஆம் ஆண்டே நல்ல வரவேற்பினை பெற்றது. இப்போது ரீ-ரிலீஸிலும் இப்படம் ஓரளவு வசூலை சந்தித்துள்ளது.
இரண்டில் எதற்கு வெற்றி?
கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்த போது, அதற்கு தியேட்டர்களில் பல ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு ஷோவும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. உலகளவில் இப்படம் (ரீ-ரிலீஸில் மட்டும்) சுமார் ரூ.50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
தளபதி திரைப்படத்தில் பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது, அப்படத்தின் பாடல்கள்தான். ஆனால், ரீ-ரிலீஸில் இசை மிக்ஸிங் சொதப்பியதால் இசை-இரைச்சலாக மாறியது. அது மட்டுமன்றி, ஒரு சில காட்சிகள் திரையிடப்பட்ட போது மங்க ஆரம்பித்தன. காட்சிகள் சில கத்தரிக்கப்பட்டிருந்தன. இதனால் படம் பார்த்த ரசிகர்கள், இப்படம் தங்களுக்கு சரியான திரையரங்கு அனுபவத்தை தரவில்லை என்று கூறினர். தளபதி படம் இப்போது வரை 1.50 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
யார் படம் மாஸ்?
விஜய்-ரஜினி இருவருமே மாஸான நடிகர்கள்தான் என்றாலும், ரீ-ரிலீஸிற்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கும் போது, விஜய்யின் கில்லி படம்தான் முன்னணியில் இருக்கிறது.
மேலும் படிக்க | ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ