ஏகே 61 ஷூட்டிங்கை முடித்த நடிகர் - அஜித் குறித்து நெகிழ்ச்சி

ஏகே 61 படத்தில் நடித்திருக்கும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா அஜித் குறித்து நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 6, 2022, 06:45 PM IST
  • ஏகே 61ல் நடிக்கிறார் ராஜதந்திரம் பட ஹீரோ
  • அஜித் குறித்து வீரா நெகிழ்ச்சி பதிவு
  • விறுவிறுப்பாக நடக்கும் அஜித் 61 ஷூட்டிங்
ஏகே 61 ஷூட்டிங்கை முடித்த நடிகர் - அஜித் குறித்து நெகிழ்ச்சி title=

நடிகர் அஜித் தனது 61ஆவது படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். இவர்கள் ஏற்கனவே இணைந்த படமான வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றதால் இந்தப் படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கூட்டணி இருக்கிறது.

வினோத்தின் பலமான க்ரைம் ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. இதில் அஜித் பேங்க் கொள்ளையராக நடிப்பதாகவும், வில்லன், ஹீரோ என இரண்டுமே அவர்தான் எனவும் தகவல்கள் பரவின.

ajith

ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்துவரும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் சமுத்திரக்கனி, இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளரும், நடிகருமான வீரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இப்படத்தில் மஞ்சுவாரியார் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் வீரா ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இதனையடுத்து அஜித்துடன் இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Vinoth

அந்தப் பதிவில், “இந்த மனிதருடன் சில நாள்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும், நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் நிற்க வைக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Veera (@veera_offl_)

பல வருட ரத்தம், வியர்வை, உழைப்பு, கடும் உழைப்பு, ஆர்வம், நேரமை, நம்பிக்கை போன்றவையே அஜித்தை மகத்தான நட்சத்திரமாக மாற்றியுள்ளது. அன்புள்ள ஏகே சார், ஒருவேளை நாம் மீண்டும் சந்திக்காமல் போனால்... அதனால் தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

மேலும் படிக்க | அஜித் பட சாதனையை முறியடித்த லெஜெண்ட் சரவணன்!- ட்ரெண்டாகும் Ajith vs Legend!

‘நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்ம் அறை தாக்கத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நாம் பழகிய நாள்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் என் இயல்பிலேயே இருக்கவிட்டீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என நீங்கள் விரும்புவது போல் உங்களுக்கும் என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News