அப்டேட் கேட்ட ரசிகர்கள்- சர்ப்ரைஸ் ட்ரீட் வைத்த ‘சலார்’ படக்குழு!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் சலார் படம் தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2022, 02:29 PM IST
  • கே.ஜி.எஃப்-2வைத் தொடர்ந்து சலார் படத்தை இயக்கிவருகிறார் பிரசாந்த் நீல்.
  • பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.
  • படம் தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அப்டேட் கேட்ட ரசிகர்கள்- சர்ப்ரைஸ் ட்ரீட் வைத்த ‘சலார்’ படக்குழு! title=

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப்-2 வசூலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற நிலையில், அவரது அடுத்த படமான சலார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஜமெளலி இயக்கிய பாகுபலி படங்களில் நடித்த பின்னர் பான் - இந்தியா ஸ்டார் எனும் ரேஞ்சுக்கு வளர்ந்தார் நடிகர் பிரபாஸ். ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அவரது அடுத்த படமான சாஹோ அவருக்கு சுமாராகவே அமைந்தது. அண்மையில் வெளியான ராதே ஸ்யாம் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

இதனால் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பேல் ஃபில்ம்ஸ் நிறுவனமே இதையும் தயாரித்துவருகிறது.

சுருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது. ஆனால் இப்படம் தொடர்பாக பெரிதாக எவ்வித அப்டேட்டும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க | KGF- 2 ‘பெரியப்பா’ பற்றி டைரக்டர் ஷங்கர் சொல்வது என்ன?!

ரசிகர்களும்கூட படக்குழுவிடம் இப்படத்துக்கு அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில் இப்படத்துக்கான அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய பக்கங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சலார் எனும் ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

மேலும் படிக்க | ‘Rowdy Baby’ பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்?- காரணம் என்ன?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News