நடிகர் பிரபாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரபாஸின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 240 கோடி என்றும், ஹைதராபாத், மும்பை மற்றும் இத்தாலியில் அவருக்கு சொந்தமாக சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 23, 2023, 12:05 PM IST
  • பான் நடிகராக உள்ளார் நடிகர் பிரபாஸ்.
  • இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • 250 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளார்.
நடிகர் பிரபாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? title=

இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகரான பிரபாஸ் தனது 44வது பிறந்தநாளை இன்று அக்டோபர் 23ஆம் தேதி கொண்டாடுகிறார். பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ், தென்னிந்தியாவில் ரசிகர்களின் மனதை வென்றதை தொடர்ந்து பெரும் பணத்தையும் குவித்துள்ளார். நடிகர் பிரபாஸ் 2002ல் ஈஸ்வர் திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் பிரபாஸை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. மேலும், பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த பிரபாஸ் தனது சம்பளத்தையும் பலமடங்கு உயர்த்தினார்.  

மேலும் படிக்க | 4 நாட்களில் 400 கோடி வசூல்! சாதனை படைக்கும் விஜய்யின் லியோ படம்!

பிரபாஸ் தனது வருமானம் மற்றும் புகழ் காரணமாக 2015 முதல் போர்ப்ஸ் இந்தியாவின் பிரபலமானவர்கள் 100 பேர் தரவரிசையில் மூன்று முறை பட்டியலிடப்பட்டுள்ளார். தற்போதுவ வெளியான தகவலின்படி, 2023ல் அவரது நிகர மதிப்பு 29 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 240 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது ஆடம்பர வாழ்க்கை அவரது சொத்துக்களில் பிரதிபலிக்கிறது.  ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 84 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் பிரபாஸ் வசிக்கிறார். 60 கோடி மதிப்பிலான இந்த வீட்டில் ஆடம்பரமான உட்புறம், உட்புற நீச்சல் குளம், பசுமையான தோட்டம் மற்றும் 1.5 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட உயர்தர உடற்பயிற்சி கூடம் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாஸுக்கு ஹைதராபாத் இல்லம் தவிர, மும்பையிலும் சொந்தமாக வீடு உள்ளது. மேலும் இத்தாலியில் ஒரு குடியிருப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது, அதற்காக அவர் மாத வாடகையாக ரூ 40 லட்சம் வசூலிக்கிறார். 1 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ், ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ6, ரூ. 2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரூ. 2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ், ரூ. 1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் போர்ட்ஃபோலியோ, ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் என பிரபாஸ் பல விலையுர்ந்த கார்களை வைத்துள்ளார. இதன் மூலம் பிரபாஸ் ஒரு கார் பிரியர் என்பது தெரிய வருகிறது.  மேலும் பிரபாஸ் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  இதில் இருந்து மட்டும் 50 கோடிக்கும் அதிகமாக வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு, பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ, ராதே சியாம், ஆதிபுருஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தன.  பிரபாஸ் ரசிகர்கள் அடுத்து சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே படத்தை நம்பி உள்ளனர். இந்த இரண்டு படங்களின் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.  ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.  மேலும் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.  சலார் படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.  கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார்.  பிருதிவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம்.. வெளியானது டைட்டில் & முதல் GLIMPSE

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News