About Vijayakanth: கறுப்பு நிறம், சிரித்த முகம், கம்பீர நடை, கணீர் குரல் என இந்த அடையாளங்களைச் சொல்லி யார் இந்த நடிகர் என்றால் அனைவரும் சொல்லும் முதல் பெயர் விஜயகாந்த் (Vijayakanth). குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுத்துவிடுவதில் வித்தகர்.
தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். அழகர்சாமி என்ற ரைஸ்மில் முதலாளியின் மகனான இவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல், தொடக்கம் முதலே திரையரங்குக்கு சென்று எம்.ஜி.ஆர் படங்களை பார்ப்பதையே வழக்கமாக கொண்டவர்.
அந்த ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவரை அவரது நிறத்தை காட்டி பல தயாரிப்பாளர்கள் கேலி செய்து அவரை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை. ஆனால் விக்ரமாதித்தன் போல தனது முயற்சியை கைவிடாத விஜயகாந்த் 1979- ம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் வெளியான "இனிக்கும் இளமை" திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
மேலும் படிக்க - தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்
விஜயராஜ் பெயர் பிடிக்காததால் "இனிக்கும் இளமை" பட இயக்குனர் விஜயகாந்த் என இவருக்கு பெயர் வைத்தாராம். விஜயகாந்த் சினிமாவுக்குள் நுழைந்த போது ரஜினிகாந்த் உச்சநடிகராக இருந்தாராம். அதனால் அவரது பெயரில் இருந்த காந்த்தை எடுத்து சேர்த்தாராம்.
'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விஜயகாந்த். 'வைதேகி காத்திருந்தாள்', 'உழவன் மகன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா', எங்கள் அண்ணா என இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு ஹீரோவாக விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை வேறந்த நடிகரும் செய்ததில்லை என்று கூறப்படுகிறது.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தை வைத்து அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கியுள்ளாகள். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்.
மேலும் படிக்க - விஜயகாந்த்..மெலிந்த உடல்.. சோர்வான முகம்..! மனதை ரணமாக்கிய காட்சிகள்..!
அதோடு 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மோசமான நிலையில் இருந்தது. வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை மீட்டார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
நடிகர் சங்கத்தலைவராக இருந்த விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதனால் சினிமாவுக்கு குட்-பை சொல்லிவிட்டார்.
இன்று காலை தேமுதிக நிறுவன தலைவர் திரு. விஜயகாந்த் காலமானார் (Vijayakanth Died). அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபகங்களையும், இரங்கலையும் ஜீ தமிழ் நியூஸ் (Zee Tamil News) சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ