அஜித்துக்கு அரசியல் எண்ணம் இல்லை - சுரேஷ் சந்திரா விளக்கம்

நடிகர் அஜித்துக்கு அரசியல் எண்ணமில்லை என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:25 PM IST
  • அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை
  • அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்துள்ளார்
  • ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் இந்த கருத்தை பதிவு செய்திருந்தார்
அஜித்துக்கு அரசியல் எண்ணம் இல்லை - சுரேஷ் சந்திரா விளக்கம் title=

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என சமூக ஊடகங்களில் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று ‘வலிமை’ திரைப்படம் வெளியாகிறது. இதற்கு முன்னர் வலிமை படத்தில் இருந்து வெளியிடப்பட்ட தாய் பாசம் பற்றிய பாடல் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க | அஜித் அரசியலுக்கு வர தயாராகிறார் - ஜெயலலிதாவின் உதவியாளர்!

நடிகர் அஜித்துக்கு புரட்சித் தலைவியின் மீது அதீத அன்பும் மரியாதையும் இருப்பதால் அரசியலுக்கு வர தயாராகிறார். அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது என்பது உள்ளிட்ட கருத்துகளை கூறியிருந்தார். பூங்குன்றனின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. ஜீ தமிழ் வலைதளத்திலும் ’ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்த அஜித், விரைவில் அரசியலுக்கு வருவார் என பூங்குன்றன் வெளியிட்டிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என செய்தியாக பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த செய்தியை மேற்கோள்காட்டி நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த பதிவில், "நடிகர் அஜித்துக்கு அரசியலுக்கு வர வேண்டும்  என்ற எண்ணம் இல்லை. இதுபோன்று தவறான தகவல்களை பதிவு செய்பவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | அஜித்துக்கு வலிமை சேர்த்திருக்கிறதா வலிமை? விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News