நடிகர் விக்ரந்த் நடிப்பில் உருவாகியுள்ள பக்ரீத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆலங் குருவிகளா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
கோலிவுட்டில் தற்போது விலங்குகளை மையாமாக கொண்டு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கொரில்லா, மான்ஸ்டர், வாட்ச்மேன் என அடுத்தடுத்து படங்கள் வரிசையில் நிற்க, இந்த வரிசையில் தற்போது பக்ரீத் திரைப்படமும் இணைந்துள்ளது.
இயக்குநர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படமானது, இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படமாகும்.
Catch the song #Aalanguruvigalaa from #Bakrid on @sunnxt @sidsriram #ManiAmuthavan @starmusicindia
Link:- https://t.co/TkURIewNwX
Praise God! pic.twitter.com/hEMtP5aU7U— D.IMMAN (@immancomposer) March 6, 2019
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆலங் குருவிகளா என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார். திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஒரு நிலப்பரப்பில் வாழும் ஒட்டகத்தை அதனுடைய இடத்தை விட்டு வேறு இடத்தில் வளர்க்க ஆசைப்படும் ஹீரோ விக்ராந்த். அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்குத் திரும்பக் கொண்டு செல்ல முற்பட்டு என்னென்ன தடைகள் எதிர்கொள்கிறார் என்பதை பக்ரீத் திரைப்படம் காட்சிபடுத்துகிறது.
இந்தாண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.