தொலைக்காட்சி தொடர்களில் ஆரம்பித்து, தற்போது பாலிவுட்டில் பெரிய நடிகராக மாறியது வரை நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி பல தடைகளை கடந்துள்ளார். தனது திறமையின் மூலம் பல நம்பமுடியாத கதாபாத்திரங்களில் நடித்து பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று சினிமா கரியரில் உச்சத்தில் இருந்த நடிகர் விக்ராந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிப்பில் இருந்து முழுவதும் ஓய்வு பெற உள்ளதாக விக்ராந்த் அறிவித்துள்ளார். நீங்கள் அளித்த உண்மையான அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
"இது மீண்டும் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம்" என்றும், 2 படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதால் 2025ம் ஆண்டுடன் நடிப்பில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் வணக்கம், கடந்த சில வருடங்கள் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. உங்களது அழியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். ஆனால் நான் முன்னோக்கிச் செல்லும்போது, மறுபரிசீலனை செய்து வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை நான் உணர்கிறேன். கணவன், தந்தை மற்றும் மகனாக. மேலும் ஒரு நடிகராகவும். எனவே வரும் 2025ல், கடைசியாக ஒருமுறை மீண்டும் சந்திப்போம். காலம் சரியாக இருக்கும் வரை. கடந்த 2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளை கொடுத்துள்ளது. மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸியின் இந்த அறிவிப்பால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். விக்ராந்த் மாஸ்ஸியின் எ டெத் இன் தி கஞ்ச், லூட்டேரா, ஹசீன் தில்ருபா, சபாக் மற்றும் 12வது ஃபெயில் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. ஏராளமான துணை கதாபாத்திரங்களுக்கு பிறகு, கொங்கனா சென் ஷர்மா இயக்குனராக அறிமுகமான படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளைத் தவிர இந்தப் படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும் பெற்று தந்தது. கடந்த சில மாதங்களில் 12வது ஃபெயில், செக்டர் 36 மற்றும் சபர்மதி எக்ஸ்பிரஸ் போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார் விக்ராந்த் மாஸ்ஸி.
இந்நிலையில் தனது 37வது வயதில் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் விக்ராந்த். விக்ராந்த் தற்போது யார் ஜிக்ரி மற்றும் ஆன்கோன் கி குஸ்தாகியான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு, வெளியான 12th Fail படத்திற்காக ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார் விக்ராந்த். இந்த படத்தின் மூலம் தென்னிந்தா ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ