சரக்கு பாட்டிலில் கலப்படம் செய்த ஆசாமிகள் கைது..!

மதுரையில் அரசு மதுபானத்தில் தண்ணீரை கலப்படம் செய்த ஆசாமிகளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:53 AM IST
  • மதுரையில் அரசு மதுபானத்தில் கலப்படம்
  • மதுவை திருடிவிட்டு தண்ணீரை கலக்கிய ஆசாமிகள்
  • 4 பேரை கைது செய்தது காவல்துறை
சரக்கு பாட்டிலில் கலப்படம் செய்த ஆசாமிகள் கைது..! title=

மதுரை மாவட்டம் முழுவதும் இருக்கும் அரசு மதுபானக்கடைகளுக்கு தேவையான அனைத்து விதமான மதுபானங்களும் மணலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்படி, மதுரையில் உள்ள விரதனூர் அரசு டாஸ்மாக் கடைக்கு கொண்டு செல்லும் பாட்டில்களின் மூடிகளில் உள்ள சீல் உடைக்கப்பட்டிருப்பதையும், மதுபான பாட்டில்களில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதையும் கடை மேலாளர் கண்டுபிடித்துள்ளார்.

ALSO READ | திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!

தொடர்ச்சியாக நடைபெறுகிறதா? என்பதை கண்டுபிடிக்க கமுக்கமான முறையில் தொடர்ந்து வரும் லோடுகளையும் கவனித்துள்ளார். கடைக்கு வரும் அனைத்து லோடுகளிலும் இதே கம்பளைன்ட் இருப்பதை உறுதி செய்த அவர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 

 

ALSO READ | திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!

அதில், ஆண்டார்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த அஜய், ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சதிஸ்குமார், டேவிட் துறை ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும் லாரிகளில் வரும் மதுபானங்களை இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, நாசுக்காக அரசு மதுபாட்டில்களை ஓபன் செய்யும் அவர்கள், அதில் இருக்கும் மதுவை மற்றொரு பாட்டிலில் குறிப்பிட்ட அளவு ஊற்றிவிட்டு, அதற்கு ஈடாக தண்ணீர் கலப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். ஒரு பாட்டிலில் இருந்து சுமார் 50 மில்லி லிட்டர் வரை எடுக்கும் அவர்கள், அந்த மதுவை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது அப்பகுதியில் இருக்கும் குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News