அமேசானில் குறைந்த விலையில் தரமான Wireless ஹெட்போன்கள்!

தெளிவான ஒலியை கேட்கும் வகையில் சிறந்த மைக்ரோபோன்கள் இயர்பட்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2022, 08:15 PM IST
  • தற்போது ப்ளூடூத் ஹெட்போன்கள் அதிகமாக விற்பனை ஆகிறது.
  • இவை பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது.
  • அமேசானில் நிறைய ஆபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அமேசானில் குறைந்த விலையில் தரமான Wireless ஹெட்போன்கள்! title=

பெரும்பாலான மனிதர்களுக்கு இசை கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்று.  சிலருக்கு நடக்கும்போது, வீட்டு வேலை செய்யும்போது, தூங்குவதற்கு முன்னர் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இசையை கேட்க பிடிக்கும்.  அதிலும் ஹெட்போன்கள் மாட்டிக்கொண்டு இசை கேட்க தான் பலருக்கும் பிடிக்கும், இவ்வாறு ஹெட்போன் போட்டு பாட்டு கேட்பது நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை தடுக்கிறது.  நமக்கு பிடித்த இசையை தரமான ஒலியளவில் தருவதில் ஹெட்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.  அதனால் நாம் சிறந்த ஹெட்போன்களை பயன்படுத்துவது அவசியமானதாகிறது.  அத்தகைய தரமான ஹெட்போன்கள் பல சலுகைகளுடன் நமக்கு கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும், அப்படி ஒரு டீல் தான் தற்போது அமேசான் வழங்குகிறது.  அமேசானில் ஏராளமான சலுகைகளுடன் கிடந்த சிறந்த ஹெட்போன்கள் பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க | வாட்ஸ் ஆப்க்கு வரும் மிரட்டல் அப்டேட்! - உற்சாகத்தில் பயனர்கள்! 

1) Noise Canceling Wireless Earbuds :

இந்த வகை இயர்பட்ஸ்கள் அமேசானில் 58% தள்ளுபடியுடன் $79.99லிருந்து $33.98க்கு கிடைக்கிறது.  முழு சார்ஜிங்கில் தொடர்ந்து இதனை 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.  இவற்றைன் வாட்டர்ப்ரூஃப் திறனுக்கு ஐபிஎக்ஸ்8 மதிப்பு வழங்கப்படுகிறது.  இவை 90% தேவைற்ற இரைச்சலை தடுப்பதோடு நமக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குகிறது, இதனால் தேவையற்ற இரைச்சல் நம்மை தொந்தரவு செய்யாது.  

noise

2) Powerbeats Pro Wireless Headphones :

அமேசானில் 10% தள்ளுபடியுடன் $199.95 லிருந்து $179.95க்கு கிடைக்கிறது.  இந்த இயர்பட்ஸ்களுக்கு 69,000 க்கும் மேற்பட்டவர்கள் 4.6 நட்சத்திர மதிப்பீட்டை கொடுத்துள்ளனர்.  வேகமான சார்ஜில் வசதியுள்ள இந்த இயர்பட்ஸ் 9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம், இயர்ஹூக்குகளை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது., விளம்பரம் - கீழே தொடர்ந்து படிக்கவும்

headphone

3) Noise-Canceling Over-Ear Wireless Headphones :

அமேசானில் 21% தள்ளுபடியுடன்$349.99லிருந்து $278க்கு கிடைக்கிறது.  30 மணிநேர பேட்டரி ஆயுளும், அதிவேக சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.  இதிலுள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் இவற்றை காதிலிருந்து நீங்கள் கழட்டியதுமே பாடல் தானாக நின்றுவிடும்.

4) Soundcore 3 Pro Earbuds :

அமேசானில் 24% தள்ளுபடியுடன் $169.99லிருந்து $129.99க்கு கிடைக்கிறது.  இவை ஹை-ரெஸ் ஒலியை வழங்குகின்றன.  தெளிவாக கேட்கும் வகையில் ஆறு மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளது.  காதுகளுக்கு வலி ஏற்படாத வகையில் இது மென்மையான சிலிக்கானால் செய்யப்பட்டு இருக்கிறது.  முழு சார்ஜில் 8 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

headphone

5) Wireless Noise-Canceling Over-Ear Headphones

இந்த வகை இயர்பட்ஸ்கள் அமேசானில்40% தள்ளுபடியில் $349.95லிருந்து $209.29க்கு கிடைக்கிறது.  இது 10 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது, மேலும் முழு சார்ஜிங்கில் 22 மணிநிறம் இதனை தொடர்ந்து பயனப்டுத்தலாம்.  இதனை ஐஓஎஸ் ஆற்றும் ஆண்ட்ராய்டு ஆகிவற்றுடன் இணைத்துக்கொள்ளலாம்.  மேலும் இவை ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.

6) QuietComfort Noise-Canceling Earbuds :

இந்த இயர்பட்ஸ் அமேசானில் 22% தள்ளுபடியுடன் $279.00லிருந்து  $219.00க்கு கிடைக்கிறது.  இதன் வாட்டர்ப்ரூஃப் திறனுக்கு ஐபிஎக்ஸ்4 மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  தேவையற்ற சத்தத்தை வடிகட்ட சிறந்த மைக்ரோபோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  முழு சார்ஜிங்கில் 6 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | iPhone 13 மற்றும் SE 3 ஐபோன்களின் உற்பத்தியை Apple குறைப்பதன் பின்னணி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News