ஆபரேஷன் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிகிறார்கள்..!!!

மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை அணிவதை நீங்கள் பார்த்திருக்க கூடும். குறிப்பாக ஆபரேஷன் செய்யும் போது இந்த வண்ண ஆடையை தான் மருத்துவர்கள் அணிவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2020, 10:00 PM IST
  • மருத்துவமனையில் திரைச்சீலைகளின் நிறமும் பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும்.
  • மருத்துவமனை ஊழியர்களின் உடைகள் மற்றும் மாஸ்குகளும் பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும்.
  • ஒரு விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால், நம் கண்களின் உயிரியல் ரீதியிலான அமைப்பில், சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ணங்களை கண்டறியும் வகையில் உள்ளது.
ஆபரேஷன் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிகிறார்கள்..!!! title=

மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை அணிவதை நீங்கள் பார்த்திருக்க கூடும். குறிப்பாக ஆபரேஷன் செய்யும் போது இந்த வண்ண ஆடையை தான் மருத்துவர்கள் அணிவார்கள். அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் ஏன் பச்சை அல்லது நீல துணியை மட்டுமே அணியிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏன் சிவப்பு, மஞ்சள் அல்லது வேறு எந்த நிறத்திலான ஆடைகளை ஏன் அணிவதில்லை என எண்ணியதுண்டா.....

முதலில், மருத்துவமனையில் (Hospital), டாக்டர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் வெள்ளை நிற உடை தான் அணிந்ததாக கூறப்படுகிறது, ஆனால் 1914 ஆம் ஆண்டில், மருத்துவர் ஒருவர், மருத்துவமனையில் பாரம்பரிய உடையின் நிறத்தை பச்சை நிறமாக மாற்றினார். அப்போதிருந்து இது கடைபிடிக்கப்படுகிறது.

இருப்பினும், சில மருத்துவர்கள் நீல நிற ஆடைகளையும் அணிவார்கள். மருத்துவமனையில் திரைச்சீலைகளின் நிறமும் பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும். இது தவிர, மருத்துவமனை ஊழியர்களின் உடைகள் மற்றும் மாஸ்குகளும் பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும்.  வேறு எந்த நிறத்திலும் இல்லாமல் பச்சை அல்லது நீல நிறம் ஏன் தேர்தெந்தெடுக்கப்பட்டுள்ளது, அதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.

அறுவை சிகிச்சையின் போது, ​​மருத்துவர்கள் கண்களை இந்த நிறங்கள் உருத்துவதில்லை என்பதால், பச்சை நிற ஆடைகளை அணிய ஆரம்பித்தனர் என ஒரு மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வண்ணத்தை நாம் தொடர்ச்சியாகப் பார்க்கும், நம் கண்கள் விசித்திரமாக சோர்வடையத் தொடங்குகின்றன. சூரியனையோ அல்லது வேறு எந்த பளபளப்பான பொருளையோ பார்த்தால், நம் கண்கள் சோர்வடையக் கூடும். ஆனால் பச்சை நிறம் கண்களுக்கு இதமாக இருக்கும்

ALSO READ |  நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

இதை ஒரு விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால், நம் கண்களின் உயிரியல் ரீதியிலான அமைப்பில்,  சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ணங்களை கண்டறியும் வகையில் உள்ளது. இந்த வண்ணங்களின் கலவையிலிருந்து உருவாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பிற வண்ணங்களை மனித கண்களால் அடையாளம் காண முடியும். ஆனால் இந்த அனைத்து வண்ணங்களையும் ஒப்பிடும்போது, ​​நம் கண்களால்  பச்சை அல்லது நீல நிறத்தை மட்டுமே காண முடியும்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கண்களை உருத்தும். ஆனால்,  பச்சை அல்லது நீல நிறம் கண்களை உருத்தாது. இதனால்தான் பச்சை மற்றும் நீலம் கண்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. மருத்துவமனைகளில், திரைச்சீலைகள் முதல் ஊழியர்களின் உடைகள் பச்சை அல்லது நீல நிறமாக இருப்பதால், மருத்துவமனையில் வரும் மற்றும் தங்கியிருக்கும் நோயாளிகளின் கண்களும் சோர்வாகமல் இருக்கும்.  

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் பச்சை நிற ஆடைகளையும் அணிந்துள்ள காரணம் என்னவென்றால் மனித உடலின் இரத்தத்தையும் உட்புற உறுப்புகளையும் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அந்த வகையில் அவரது மூளை பச்சை நிறத்தைப் பார்த்தால்,  மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது. சில நேரங்களில் மருத்துவர்கள் நீல நிற ஆடைகளையும் அணிகிறார்கள் நீல நிறமும் பச்சை நிறத்தைப் போலவே மூளைக்கும் கண்களுக்கும் இதமானது.

ALSO READ | இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News