உங்களை பிடித்தவரை ஈர்க்க என்ன பரிசு கொடுக்கலாம்? இதோ சில டிப்ஸ்!

நமக்கு பிடித்த ஆணிற்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுப்பது என்று நமக்கே சந்தேகம் எழும். அதை இந்த பதிவின் மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 6, 2023, 07:44 PM IST
  • நம் மனதுக்கு பிடித்தவருக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?
  • கையடக்க பொருட்கள் சிறந்த பரிசாக இருக்கும்.
  • இதோ சில ருசிகர டிப்ஸ்!
உங்களை பிடித்தவரை ஈர்க்க என்ன பரிசு கொடுக்கலாம்? இதோ சில டிப்ஸ்!  title=

பெண்ணின் மனதை புரிந்து கொள்ள அவர்களிடம் பேசினாலே போதும். ஆனால், ஆண்கள் மனதை புரிந்து கொள்ள அவர்களை பேச வைப்பதே மிகவும் சிரமம். ஆதலால், அவர்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை பெரும்பாலான சமயங்களில் பலரால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விடுகிறது. அது மட்டுமன்றி, அவர்களுக்கு சர்ப்ரைஸாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது அவர்களிடமே “உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்று கேட்டால் நன்றாகவா இருக்கும்? எனவே, உங்களுக்கு பிடித்தவருக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க. 

1.கையடக்க பொருட்கள்:

நாம் அடிக்கடி, நமக்காக மட்டும் பயன்படுத்தும் பொருட்களை பர்சனலைஸ்ட் பொருட்கள் என்கிறோம். பர்ஸ், விரலில் அணியும் மோதிரம், ஏதாவது எழுதிய ப்ரேஸ்லெட் என இப்பொருட்களுக்கான எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம். இது போல, அவர் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவதால் நாம் எந்தளவிற்கு அவர் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதை அவர் புரிந்து கொள்வோர்ம். இது போன்ற பரிசுகளை கொடுக்கையில் அதை அவர் உபயோகிக்கும் போது நாம் அவருக்கு அருகில் இருப்பது போலவே அவர் உணருவார். 

2.அனுபவப் பரிசுகள்:

பரிசுகளை பொருட்களாக கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு பெற வேண்டும் என்று நினைக்கும் அனுபவத்தையும் நீங்கள் அவருக்காக கொடுக்கலாம். உதாரணத்திற்கு, உங்களுக்கு பிடித்த அந்த நபர் வெகு நாட்களாக ஏதாவது இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த இடத்திற்கு அவரை அழைத்து செல்லலாம். அவருக்கு பிடித்த உணவை உங்கள் கையால் சமைத்து கொடுத்து அசத்தலாம். இவ்வளவு ஏன், பிறந்தநாள் கேக்கை கூட ஹோம் மேட் ஆக செய்து தரலாம். அவர் கண்டிப்பாக இது போன்ற பரிசுகளால் ஈர்க்கப்படுவார்.

3.புத்தகங்கள்:

உங்கள் ஆள், மிகவும் அறிவார்ந்தவர் அல்லது படிப்பாளி என்றால் அவரது To Be Read லிஸ்டில் இருக்கும் புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம். கதைகள் படிப்பதில் ஆர்வம் காட்டுபவர் என்றால் அவருக்கு பிடித்த வகையில் ஏதேனும் கதை நாவலை வாங்கி கொடுக்கலாம். தனக்கு பிடித்த ஒருவர், தனக்கு பிடித்த ஹாபிக்கு தகுந்தார் போல பரிசு கொடுத்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் அசந்துதான் போவார்கள். 

மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? இந்த பச்சை இலையை சாப்பிடுங்கள்

4.தொழில்நுட்ப கேஜெட்டுகள்:

தொழில்நுட்ப பரிசுகள் புதியவை அல்ல என்றாலும், அதிகம் அறியப்படாத கேஜெட்களின் உலகத்தை ஆராயுங்கள். உங்களுக்கு பிடித்தவரின் உடலில் நீர்ச்ச்த்து குறையாமல் இருக்க ஒரு ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் வாங்கி கொடுக்கலாம். ஸ்மார்ட் வாட்ச், இயர் பட்ஸ் போன்றவை இப்போது உங்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. அவர் வாங்க நினைத்திருக்கும் பிராண்டில் இருந்து கூட நீங்கள் அந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இவை ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் தனித்துவமான தேர்வுகளாகும். 

5.அவருக்கு பிடித்த பொழுதுபோக்கு தொடர்பான பரிசுகள்:

அவரது ஆர்வங்கள் தொடர்பான பரிசு ஒன்றைக் கொடுப்பதன் மூலம் அவரது ஹாபிக்களுக்கான உங்கள் பாராட்டுக்களைக் காட்டுங்கள். அவர் சமையல், கேமிங் அல்லது தோட்டக்கலை விரும்பினாலும், உயர்தர சமையலறை கேஜெட், புதிய கேம் அல்லது பிரத்யேக கருவிகள் அவரது பொழுதுபோக்கை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.

மேலும் படிக்க | பளபளக்கும் சருமத்திற்கு தினமும் இந்த யோகாசனங்களை செய்யவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News