மனித வாழ்க்கை பல வித நம்பிக்கைகளின் அடிப்படையில் நகர்கிறது. ஆனால், இங்கு நிச்சயமற்ற பல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைய வாழ்க்கை முறையைப் பார்த்தால், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கடினமான சூழ்நிலைகள் வரக்கூடும். ஆகையால், குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குவது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், காப்பீடு உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
காப்பீடுகளில் ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, டேர்ம் இன்சூரன்ஸ் என பல வகையான காப்பீடுகள் உள்ளன. இந்த அனைத்து வகையான காப்பீடுகளிலும், ஆயுள் காப்பீடு மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் பற்றிய குழப்பம் அதிகம் உள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன? ஆயுள் காப்பீட்டில் இருந்து இது எப்படி வித்தியாசமானது? அதை வாங்கும் போது எதை மனதில் கொள்ள வேண்டும்? இவற்றுக்கான விளக்கங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கால மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்
ஆயுள் காப்பீட்டு பாலிசி வாழ்க்கைக்கு கவரேஜ் வழஙகும் பணியை செய்கிறது. இதில், காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு அவர் இறந்தால், அவரது நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்கள் இறப்பு மற்றும் முதிர்வுப் பலன்களை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி உதவியாகப் பெறுவார்கள்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நிலையான கட்டண விகிதத்தில் கவரேஜ் வழங்கும் ஒரு வகை ஆயுள் காப்பீட்டு பாலிசி ஆகும். அத்தகைய சூழ்நிலையில், பாலிசியின் காலப்பகுதியில் காப்பீடு செய்யப்பட்ட நபரின் மரணம் ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை நாமினிக்கு மொத்தத் தொகையாக வழங்கப்படும். இது குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது. ஆயுள் காப்பீடு போன்ற டேர்ம் இன்சூரன்ஸில் முதிர்வு வருமானம் கிடைக்காது.
வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், கால ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விலக்கு உண்டு. மேலும் வரி செலுத்துவோருக்கு அவர்களின் ஆண்டு வருமானத்தில் செலுத்த வேண்டிய வரிகளில் இருந்து சில நிதி நிவாரணங்களும் கிடைக்கும்.
மேலும் படிக்க | தினம் ₹100 சேமித்தால் போதும்... கோடீஸ்வரனாகும் எளிய வழி இதோ!
டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்
- உங்கள் வருமான அடிப்படையைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யுங்கள். டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் வருவாயில் 10-15 மடங்கு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
- நீங்கள் எவ்வளவு விரைவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்குகிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும். இளம் வயதில், நீங்கள் மலிவு பிரீமியத்தில் காப்பீட்டை லாக் செய்ய முடியும்.
- வருமான ஆதாரங்கள், கடன்கள் மற்றும் பொறுப்புகள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கை முறை, நிதி இலக்குகள் போன்றவற்றை மதிப்பீடு செய்த பின்னரே டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கவும்.
- டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கும் போது, அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும். அனைத்து வகையான இறப்புகளும் டேர்ம் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படாததால், பாலிசியின் கீழ் இறப்புக்கான காரணங்கள் என்ன என்பதைச் சரிபார்க்கவும். பாலிசிதாரரின் மரணம் டேர்ம் பிளானின் கீழ் உள்ள காரணங்களால் ஏற்பட்டால் மட்டுமே க்ளைம் பணம் கிடைக்கும்.
- டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆன்லைனில் வாங்குவது நல்லது. இதில் இடைத்தரகருக்கு கமிஷன் கொடுக்க வேண்டியதில்லை. இதன் பிரீமியம் மலிவானது. இதன் அனைத்து விவரங்களையும் நீங்களே நிரப்புவதால், இதில் பிழைகளுக்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே இருக்கின்றன.
மேலும் படிக்க | வங்கியில் பணம் பாதுகாப்பா இருக்கனுமா... அப்போ இதில் ரொம்ப ஜாக்கிரதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ