இந்த வாரத்தில் ராசியாக இருக்குமா உங்கள் ராசி மே 1 வரை வார ராசிபலன்

எதிர்வரும் 7 நாட்கள் சிலரின் தொழிலில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். இந்த மாற்றங்கள் நல்லதாகவோ அல்லது அல்லதாகவோ இருக்கலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும், சில ராசிக்காரர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2022, 04:52 PM IST
  • மே முதல் தேதி வரையிலான ராசி பலன்
  • ஒரு வாரத்திற்கு உங்கள் ராசிக்கான பலன்கள்
  • ராசியாக இருக்குமா உங்கள் ராசி?
இந்த வாரத்தில் ராசியாக இருக்குமா உங்கள் ராசி மே 1 வரை வார ராசிபலன்  title=

Weekly Horoscope: 2022, 25 ஏப்ரல் முதல் மே 1:  இந்த வார ஜோதிட கணிப்பின்படி, சில ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, விரும்பிய வேலை அல்லது பணி இடமாற்றம் பெறுவதற்கான நல்ல செய்திகளையும் பெறலாம். 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

மேஷம் - இந்த வாரம், படிப்பிலும், கற்பிப்பதிலும் ஆர்வத்தை வெளிப்படுத்துவீர்கள், உங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான வழிகளை கண்டறிவீர்கள். வேலையில் சோம்பேறித்தனத்தை கைவிட வேண்டும், வெற்றி பெற கடின உழைப்பு மட்டுமல்ல, துரிதமாக வேலை செய்வதும் அவசியம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபடும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நிவாரணம் கிடைக்கும். விரைவில் நல்ல செய்தி ஒன்று வரலாம். எந்தவித சர்ச்சைகளில் சிக்கவேண்டாம். தற்போதுஅமைதியாக இருப்பது நல்லது.

ரிஷபம் - இந்த வாரம் உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்த வேண்டும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவசரப்படாமல் முதலில் சரியாக திட்டமிடுங்கள். உங்களுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை சிறியதாக தோன்றினாலும், அது தீர்க்க முடியாத அளவுக்கு பெரியதாக இருக்கலாம்.

பரஸ்பர உறவுகள் கசந்து போவதற்கு காரணம் சரியாக பேசிக்கொள்ளாமல் இருப்பதே. சுமூகமான பேச்சுவார்த்தை இருந்தால் உறவு இனிமையாக இருக்கும்.  

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

மிதுனம் - இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் நேர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள், சோர்வடைய வேண்டாம். சாப்ட்வேர் பணியில் இருப்பவர்கள் இந்த வார இறுதியில் பலன்களைப் பெறலாம். கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்.

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். இதய நோயாளிகள் வாரத்தின் மத்தியில் இருந்து உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சோம்பலை கைவிட வேண்டிய நேரம் இது. அவர்கள் கடுமையாக உழைத்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

கடகம் - இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெற நேர்மறை சிந்தனையுடன் முன்னேற வேண்டும். முழு ஆற்றலுடனும் விடாமுயற்சியுடனும் உழைத்தால், வெற்றியை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. வியாபார விஷயங்களிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். விட்டுக் கொடுத்து முன்னேறுங்கள்.

28ஆம் தேதிக்குப் பிறகு குடும்ப உறவுகளில் எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காதீர்கள். சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | நண்பராக இருந்தாலும் அலுவலகத்தில் எச்சரிக்கை தேவைப்படும் 3 ராசிக்காரர்கள்

சிம்மம் - இந்த வாரம் இன்னும் கொஞ்சம் குழப்பமும், நிறைய எரிச்சலும் உங்களுக்காக காத்திருக்கிறது. ஆனால் வருத்தம் வேண்டாம், நிதானமாக இருங்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆனால், இது உங்களுடைய திறனை வெளிப்படுத்தும் என்பதால் எதிர்கொள்ள  தயாராக இருங்கள்.

கன்னி - கன்னி ராசிக்காரர்கள் தங்கள் நடத்தை மற்றும் நல்ல தொடர்பு ஆகியவற்றால் முழு பலனைப் பெறப் போகிறார்கள். அரசு வேலையில் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆ

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் எடை குறைவதைக் காண்பீர்கள். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் முக்கியத்துவம் உண்டு, யாரையும் அவமதிக்காதீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

துலாம் - மென்மை என்பது மற்றவர்களைக் கவரக்கூடிய ஒரு குணம். மென்மைத்தன்மையுடைய துலாம் ராசிக்காரர்கள், புதிய வேலையைத் தேடுபவராக இருந்தால், சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும். பொறுமையாக இருங்கள்.

குடும்பத்தைப் பற்றி ஏதேனும் முக்கியமான முடிவை எடுக்க விரும்பினால், பெரியவர்களின் கருத்தை கேட்கவேண்டும், ஏனெனில் அவர்களின் கருத்து உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏழைகளுக்கு இயன்றவரை தானம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் தானம் புண்ணியத்தின் வடிவில் சேமிப்பாக மாறி, அதன் பலன் எதிர்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்: குருவும் சுக்கிரனும் சேர்ந்து நன்மை செய்வார்கள்

விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் எதிர்காலத் தேவைகளின் அடிப்படையில் பயனுள்ளதாக இருக்கும் வாரத்தில் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள இதுபோன்ற போக்கை மேற்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ரகசிய விஷயங்கள் கசிவதால் பிரச்னைகள் ஏற்படும்.

மதச் சடங்குகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். 

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் அனைத்து மக்களுடனும் தொடர்பைப் பேண வேண்டும். நேரடி சந்திப்பு இல்லாவிட்டாலும், தொலைபேசியிலாவது தொடர்பில் இருங்கள். உங்கள் வேலையை புத்திசாலித்தனமாகவும் சரியாகவும் செய்யுங்கள். கவனக்குறைவாக இருக்க வேண்டாம், ஏனெனில் இது வேலைக்கு ஆபத்தைக் கொடுக்கும்.

இந்த வாரம் இளைஞர்கள் கௌரவங்கள் மற்றும் விருதுகளைப் பெறுவார்கள், இது அவர்களின் சமூக நிலையை மேலும் மேம்படுத்தும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் வரவு உண்டாகும்

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு வரும் வாரத்தில் பொறுப்புகள் ஓரளவுக்கு அதிகரிக்கும் என்பதால், அனைத்து வேலைகளையும் முடிக்க தயாராக இருக்க வேண்டும். உடலில் சோர்வாக உணர்வீர்கள். மசாஜ் செய்வதன் மூலம் சோர்வை நீக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.  

கும்பம்- இந்த வாரத்தில் சிலசமயம் மனச்சோர்வு உண்டாகும். கவலைப்படவேண்டாம். அலுவலக பணி தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த வாரம் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்களுக்கு இந்த வாரம் சில நல்ல தகவல்கள் வரும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். சுயநலமின்றி சமூகப் பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சி கிடைக்கும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அவர்களின் முன் திட்டமிடப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். அலுவலகத்தில் பதவி உயர்வு பற்றிய நல்ல தகவல் கிடைக்கும், ஆனால் இதன் மூலம் பொறுப்புகளின் சுமையும் அதிகரிக்கும்.

விபத்து ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். இனி வரும் காலங்களில் நல்வாழ்வு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.  

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News