மனிதனுக்கு விருப்பங்கள் என்பது ஒரு அளவுடன் இருந்தால் பரவாயில்லை. அளவை மீறினால் தான் எதுவும் சிக்கலாக மாறுகிறது.
மது அருந்துவது, புகைபிடிப்பது, பாலியல் விருப்பங்கள், ’ஏ’ படங்களைப் பார்ப்பது மட்டுமா மனிதனுக்கு போதையைத் தருகிறது? ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீதான அதீத ஆசை, மோகம் என்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
விளையாட்டுகள், உணவு, பானங்கள், ஒரு குறிப்பிட்ட நாடகத் தொடரைப் பார்ப்பது, மெகா சீரியல் மோகம் என பல விஷயங்கள் மக்களுக்கு மோசமான போதையைக் கொடுக்கலாம்.
Also Read | உடலுறவில் ஆணுறைக்கு பதிலாக பசையை பயன்படுத்திய நபர் பரிதாப மரணம்
சில சமயங்களில் இந்த ஆசைகள் ஒரு குறிப்பிட்ட செலவிற்குள் அடங்கிவிடும். இருந்தாலும், எதையும் அளவுடன் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்லப்படுகிறது.
ஏதாவது ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அதில் இருந்து மீண்டு வெளிவர முயற்சிச் செய்யுங்கள்.
ஒரு ஆவண நிறுவனத்தில் தயாரிப்பாளர் மார்க் ஜோஹன் தனது அதீத விருப்பத்திற்காக நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உள்ளூர் நாளிதழின் அறிக்கையின்படி, மார்க் தனது கடன் அட்டையைப் பயன்படுத்தி ’ஏ’ படங்களைப் பார்த்ததற்காக அவரது நிறுவனத்தால் கண்டித்தது. அதுமட்டுமல்ல, நிறுவனம் மார்க் மீது மோசடி வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தது.
2019 அக்டோபர் மற்றும் 2020 நவம்பர் மாதத்திற்கு இடையில் கிராய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு, லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
READ ALSO | 10 ஆப்கன் சிறுமிகளை மீட்ட 11 குழந்தைகளின் அமெரிக்க அன்னை
மோசடி நடந்த 2019ஆம் ஆண்டுவாக்கில் மார்க் நிறுவனத்தின் தளவாடத் துறையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நிறுவனத்தில் அவர் பணிபுரிந்த துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் அவருக்கு கடன் அட்டையை கொடுத்திருந்தது.
நிறுவனத்தின் கடன் அட்டையை தனது சுய ஆசையை பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொண்டார். நிறுவனத்தின் கடன் அட்டையை பயன்படுத்தி ஆன்லைனில் வயது வந்தோருக்கான ’ஏ’ படங்களை பார்க்க பயன்படுத்தினார்.
நிறுவனத்தில் கணக்கு தணிக்கை நடைபெற்றபோது, ஒரு கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. அந்த ஒரு கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை என்ற நிலையில், நிறுவனத்தின் உள் விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையில் மார்க் தனது மோசடியை ஒப்புக்கொண்டு 2020 இல் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. மார்க்கின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
ALSO READ | Bizarre Warning! திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் நுழைய வேண்டாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR