ராஜ நாகத்தை பற்றி சில சுவாரஸ்யமான உண்மை தகவல்கள்

ராஜநாகம் பாம்புகள் பொதுவாக கூடுகட்டி முட்டை இடும் வழக்கம் உண்டு. இது சுமார் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 10:52 AM IST
ராஜ நாகத்தை பற்றி சில சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் title=

உலகில் பலவகையான பாம்பு வகைகள் உள்ளது. பாம்பில் 15 குடும்பங்களும் 2900 இனங்களும் உள்ளன. இதுவரை வாழ்ந்த மிக பெரிய பாம்பு இனங்களில் ஒன்றாக டைட்டானிக் போயா உள்ளது. இதன் எடை 1385 கிலோ ஆகும். 

இந்த தொகுப்பில் ராஜ நாகம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை குறித்து பார்க்கலாம். ராஜநாகம் பாம்புகள் பொதுவாக கூடுகட்டி முட்டை இடும் வழக்கம் உண்டு. இது சுமார் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவை மற்ற நாக பாம்புகளை விட அத புத்தி கூர்மை உடையது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும். 

ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன இந்த வகை பயன்புகள்.  இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினாலான பட்டைகளுடன் காணப்படுகின்றன.

இதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் செய்தியை வாயின் மேல் அண்ணத்தில் உள்ள யாக்கோப்சன் உறுப்பு என்னும் நுகர்பொறி உணர்கின்றது. ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது நாக இனத்தை சார்ந்தது அல்ல. இதன் அறிவியல் பெயர் ஓபியோபாகஸ் ஹன்னா என்பதாகும்.

கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும். இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.

இந்த இனம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்றது. தாய் கருநாகமானது தனது நீள உடல் முழுவதையும் மலையடுக்கு போல வட்டமாக சுருட்டிக்கொண்டு அதன் உள்ளே முட்டைகளை இடுகின்றது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். தாய் தான் இட்ட முட்டைகளை வேறு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், அதற்குள்ளே இருக்கும் வெப்பம் சீராக மாறாமல் இருக்குமாறும், காய்ந்த இலைகளைக் குவித்து அதனுள் முட்டைகளை வைத்திருக்கும். 

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News