விமான டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி... இந்தியர்களுக்கு விசேஷ சலுகை..!!

வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 20, 2024, 07:12 PM IST
  • வியட்நாம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு
  • இந்தியர்கள் வியட்நாம் செல்ல விரும்புவதற்கான காரணம்.
  • Vietjet இந்தியாவில் அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது.
விமான டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி... இந்தியர்களுக்கு விசேஷ சலுகை..!! title=

தற்போது, ​​இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த வெளிநாட்டு நாடாக, வியட்நாம் உருவெடுத்துள்ளது. வியட்நாம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 248 சதவீதம் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. நீங்களும் வியட்நாம் செல்ல விரும்பினால், பாதி விலையில் விமான டிக்கெட்டைப் பெற சிறந்த வாய்ப்பு உள்ளது. ஆம், வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடி சலுகை இன்று முதல் தொடங்கியுள்ளது. நீங்கள் ஒரு வாரத்திற்கு அதன் பலன்களைப் பெறலாம்.

VietJet விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே வணிகம், SkyBoss, Deluxe மற்றும் Eco ஆகிய அனைத்து வகுப்புகளிலும் பயணிகளுக்கு, இது வரை இல்லாத வகையில் 50% தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையில் வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த சலுகை மே 20 முதல் மே 27, 2024 வரை அமலில் இருக்கும். இந்த தேதிகளுக்கு இடையில், வாடிக்கையாளர்கள் மே 20 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான தேதிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் மே 25, 2024 வரை சர்வதேச சொகுசு பிராண்டுகளின் ஆன்லைன் வரி இல்லாத பொருட்களுக்கு 50% தள்ளுபடியை பெற முடியும். www.vietjetair.com அல்லது Vietjet Air மொபைல் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வியட்ஜெட் விமான நிறுவனம் 1,96,90,174 (6 பில்லியன் VND) மொத்தப் பரிசுத் தொகையுடன் ஒரு அற்புதமான அதிர்ஷ்டக் குலுவையை வழங்குகிறது. அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் 12 விமான டிக்கெட்டுகளுக்கு ரிடீம் செய்யக்கூடிய ஸ்கை கோல்ட் மெம்பர்ஷிப் பாஸ்களை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். ரூ. 32814 மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்கள் (10 மில்லியன் வியட்நாமிய டாங்) மற்றும் விருப்பமான பிராண்டுகளின் பல பரிசுகள். லக்கி டிரா கேம்களில் தினசரி லக்கி ஸ்பின் மற்றும் மாதாந்திர லாட்டரி ஆகியவை அடங்கும். மே 5 முதல் ஆகஸ்ட் 7 வரை டிக்கெட் வாங்குவதற்கு இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். https://game.skyjoy.vietjetair.com/mua-ve-vietjet-trung-so-moi-ngay என்ற தளத்தை பார்வையிடுவதன் மூலம் பயணிகள் அதிர்ஷ்டக் குலுவில் பங்கேற்கலாம்.

மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!

Vietjet இந்தியாவில் அதன் நெட்வொர்க்கை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளது. இந்த விமான நிறுவனம் தற்போது இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களான மும்பை, புது தில்லி, அகமதாபாத் மற்றும் கொச்சி ஆகியவற்றில் ஒவ்வொரு வாரமும் 29 விமானங்களை இயக்குகிறது. மாஸ்டர் கார்ட் எகானமிக் இன்ஸ்டிட்யூட், Travel Trends 2024: Breaking Boundaries என்ற தலைப்பில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் வியட்நாம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை விட 248 சதவீதம் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

வியட்நாமின் நாணயம் டாங். அதன் நாணயத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஒரு ரூபாய் வியட்நாமின் 305.64 டாங்கிற்கு சமம். எனவே, இந்திய நாணயத்தில் வியட்நாமில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவது மிகவும் விலை குறைவானதாக இருக்கும். அதனால்தான் இந்தியர்கள் அங்கு அதிகம் செல்கிறார்கள்.

மேலும் படிக்க | இந்திய சுற்றுலா பயணிகளின் கனிவான கவனத்திற்கு... விசா விதிகளில் மாற்றம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News