புதுடெல்லி: வாஸ்து சாஸ்திரத்தில் நமது வாழ்வில் மகிழ்ச்சிக்கும், வளத்திற்கும், வெற்றிக்கும், நிம்மதிக்கும் பல குறிப்புகளும் வழிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி அதன்படி செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில் (Vastu Shastra), சமையலறையின் திசை, அதில் வைக்கப்பட்டும் பொருட்கள் மற்றும் அவை பயன்படுத்தும் முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, நாம் தினமும் சமையலறையில் (Kitchen) பயன்படுத்தும் சப்பாத்தி கட்டை மற்றும் சப்பாத்தி கல்லுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை வாங்குவது முதல் அதைப் பயன்படுத்துவது வரை பல முக்கியமான வாஸ்து வழிமுறைகள் உள்ளன. இவற்றை முறையாக கடைபிடிக்காமல் இருந்தால், வீட்டில் பண விரயம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
சப்பாத்தி கல் மற்றும் சப்பாத்தி கட்டை தொடர்பான சில முக்கியமான விதிகள்
- சப்பாத்தி செய்ய சப்பாத்தி கல் மற்றும் கட்டை பயன்படுத்தப்படுகின்றது. நாம் உண்ணும் உணவுக்கும் நம் வாழ்க்கைக்கும் பல வித இணைப்புகள் உள்ளன.
- சப்பாத்தி கல் மற்றும் கட்டை வாங்க சரியான நாளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, சப்பாத்தி கல் மற்றும் கட்டையை புதன்கிழமை வாங்க வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், செவ்வாய்-சனிக்கிழமைகளில் வாங்குவதையாவது தவிர்க்க வேண்டும்.
ALSO READ: Vastu Tips: செல்வச்செழிப்புடன் சூப்பரா வாழ சுலபமான வாஸ்து குறிப்புகள்
- சப்பாத்தி கல் மற்றும் கட்டையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். சப்பாத்தி செய்த பிறகு பலர் தினமும் சப்பாத்தி கல் மற்றும் கட்டையை சுத்தம் செய்வதில்லை. அவ்வாறு செய்வது பணம் மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் எதிர்மறையானது. இது பணப் பற்றாக்குறைக்கு (Cash Crunch) வழிவகுக்கிறது.
- பயன்படுத்திய பிறகு சப்பாத்தி கட்டை மற்றும் கல்லை கழுவி சுத்தமான இடத்தில் வைக்கவும். ஆனால் அதை தலைகீழாக வைக்கக்கூடாது. மேலும், அரிசி, கோதுமை மாவு ஆகியவை இருக்கும் பாத்திரங்களின் மேல் இதை வைக்கக்கூடாது. இப்படி செய்தால், வீட்டில் வறுமை அதிகரரிக்கும்.
- சப்பாத்தி கல் அல்லது கட்டை உடைந்தால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.
- சபாத்தி இடும்போது சத்தம் செய்யும் கல்லை பயன்படுத்த வேண்டாம். இதன் காரணமாக, வீட்டில் சண்டைகள் அதிகரிக்கின்றன.
(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்வல்களாகும். இவை அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ: Vastu Tips: Money Plant வைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பாக செய்யாதீர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR