ரூ. 3.06 லட்சம் வரை சலுகை, மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!

ஏப்ரல் 2021 இல் மஹிந்திரா அல்தூரஸ் ஜி 4 இல் சில கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 07:00 PM IST
ரூ. 3.06 லட்சம் வரை சலுகை, மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு! title=

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிஎஸ்6 மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) ஏப்ரல் 2021 இல் தனது கார்களை வாங்குவதில் சில சுவாரஸ்யமான தள்ளுபடியை வழங்கி வருகிறது. இந்த மாதத்தில் தனது முதன்மை எஸ்யூவி Alturas ஜி 4 இல் சில கூடுதல் சலுகைகளுடன் அதிகபட்சமாக ரூ. 3.02 லட்சம் தள்ளுபடியை வழங்குகிறார்.

சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவைகளாக வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 2021 இல் மஹிந்திரா (Mahindra) அல்தூரஸ் ஜி 4 வாங்கும்போது ரூ .2.2 லட்சம் ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது, பரிமாற்ற போனஸ் ரூ .50000 மற்றும் கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ .11500 வழங்குகிறது. இதனுடன், இந்த கார் வாங்கும்போது உற்பத்தியாளர் ரூ .20,000 வரை இலவச பாகங்கள் வழங்குகிறார்.

ALSO READ | பெட்ரோல் விலை உயர்வால் கவலையா? இந்தியாவின் best E-Cars இதோ உங்களுக்காக

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 சலுகை விவரங்கள்- அதிகபட்சம் ரூ. 3.06 லட்சம்

தள்ளுபடி ரூ. 2.2 லட்சம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 50 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 16 ஆயிரம்
கூடுதல் பலனகள் ரூ. 20 ஆயிரம் வரை

மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 இன் முக்கிய அம்சங்கள்

engine: 2157 cc
பிஹச்பி: 178.49 பிஹச்பி
seating capacity: 7
drive type: rwd or 4டபில்யூடி
top பிட்டுறேஸ்: anti lock braking system
பவர் ஸ்டீயரிங்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News