Best Selling Bike Brands: உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான யூனிட் வாகனங்களை விற்பனை செய்கின்றனர். இது, இருசக்கர வாகனங்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றன. மேலும் அவை கையாளுவதற்கு எளிதானவையும்கூட. எனவே, அவை இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் விருப்பமான போக்குவரத்து முறையாக அமைகின்றன.
இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், மொத்தம் 11 லட்சத்து 29 ஆயிரத்து 661 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், 10 லட்சத்து 50 ஆயிரத்து 79 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன, இது 7.5 சதவீதம் அதிகமாகும். இந்தாண்டு பிப்ரவரியில் அதிகம் விற்பனையாகியுள்ள முதல் 5 இருசக்கர வாகன பிராண்டுகள் மற்றும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அவற்றின் ஆண்டு வளர்ச்சியை ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | தனது புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய யமஹா! என்ன என்ன சிறப்பம்சங்கள்?
ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகன பிராண்டில், ராயல் என்ஃபீல்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. ராயல் என்ஃபீல்டு பிராண்டில் எந்த ஸ்கூட்டரும் விற்பனையில் இல்லை. மேலும், ராயல் என்ஃபீல்டு இந்த பட்டியலில் உள்ள ஒரே இருசக்கர வாகன பிராண்டாகும். இது 350சிசி டிஸ்ப்ளேஸ்மென்ட் கீழ் எந்த மோட்டார் சைக்கிள்களையும் கொண்டிருக்கவில்லை.
பிப்ரவரி 2022இல், ராயல் என்ஃபீல்டு 64 ஆயிரத்து 436 யூனிட்களை விற்றது. இந்தாண்டு பிப்ரவரியில் 52 ஆயிரத்து 135 யூனிட்களை விற்றது. ஆண்டு வளர்ச்சி 23.5 சதவீதம். தொடக்க நிலை ஹண்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிளாசிக் ரேஞ்ச் போன்ற புதிய வெளியீடுகள் ராயல் என்ஃபீல்டு வலுவான ஆண்டு வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
பஜாஜ்
இந்த பட்டியலில் நான்காவதாக பஜாஜ், இதிலும் எந்த ஸ்கூட்டரும் விற்பனையில் இல்லை. பிப்ரவரி 2023 இல், பஜாஜ் 1 லட்சத்து 18 ஆயிரம் 39 யூனிட்களை விற்றது. கடந்தாண்டு பிப்ரவரியில் 96 ஆயிரம் 523 யூனிட்களை விற்றது, ஆண்டு வளர்ச்சி 22 சதவீதம். பல்சர் சீரிஸ், வாடிக்கையாளர்களை கவர்வதால், அதன் தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் அப்டேட்கள் பஜாஜுக்கு மாயா ஜாலங்களை நிகழ்த்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ்
பிப்ரவரி 2023இல், டிவிஎஸ் பஜாஜை முந்தி, மூன்றாவது சிறந்த விற்பனையான இரு சக்கர வாகன பிராண்டாக மாறியது. இதற்கு காரணம், பரந்த அளவில் உள்ள அதன் ஸ்கூட்டர்கள், மொபட் உள்ளிட்டவைதான். அப்பாச்சி சீரிஸ் பைக்குகள் மற்றும் N-Torq ஸ்கூட்டர் ஆகியவை டிவிஎஸ் பிராண்ட் மாதந்திர வளர்ச்சி எண்ணிக்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிப்ரவரி 2023இல், டிவிஎஸ் உள்நாட்டு சந்தையில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 402 யூனிட்களை விற்றது. இது ஹோண்டாவின் விற்பனையை நெருங்கியது. ஒப்பிடுகையில், டிவிஎஸ் கடந்த பிப்ரவரியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 198 யூனிட்களை விற்றது, இது 27.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
ஹோண்டா
இரண்டாவது இடத்தில் ஹோண்டா உள்ளது. பிப்ரவரி 2023இல் 2 லட்சத்து 27 ஆயிரத்து 84 யூனிட்களை விற்றுள்ளது. TVS-ஐ போலவே, ஹோண்டாவின் பரந்த அளவிலான ஸ்கூட்டர்கள், கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் செயல்திறன் மோட்டார்சைக்கிள்கள் ஜப்பானிய ஹோண்டாவின் விற்பனைக்கு பங்களிக்கின்றன. ஹோண்டா Ctiva இரு சக்கர வாகன தயாரிப்பாளரின் இந்தியாவில் சிறந்த விற்பனையாளராக உள்ளது. இருப்பினும், கடந்த மாதம், ஹோண்டா 20.5 சதவீத எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப்
இரு சக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவிலும் உலக அளவிலும் முன்னணியில் உள்ளது. பிப்ரவரி 2023இல், ஹீரோ மோட்டோகார்ப் 3 லட்சத்து 82 ஆயிரத்து 317 யூனிட்களை விற்று, 15.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. பிப்ரவரி 2023இல், ஹீரோ உள்நாட்டு சந்தையில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 462 யூனிட்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ