PM Ujjwala Yojana 2.0: கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசம்! முந்துங்கள்

நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர் மற்றும் சமைப்பதற்கான கேஸ் அடுப்பு இலவசமாக கொடுக்கப்படுகின்றன. இவற்றை பெற நிபந்தனைகள் என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2021, 08:07 PM IST
  • கேஸ் சிலிண்டர் இலவசம்
  • கேஸ் அடுப்பும் இலவசம்
  • இலவசத்தை பெற நிபந்தனையும், ஆவணங்களும்
PM Ujjwala Yojana 2.0: கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசம்! முந்துங்கள் title=

PM உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த்த் திட்ட்த்தின் இரண்டாம் கட்டமான கீழ், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் பலன்கள் பலருக்கு தெரியாது. இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக கிடைக்கும். இந்த தகவல் தெரியாவிட்டால், இழப்பு உங்களுக்குத் தான். உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெறுங்கள்; பயனடையுங்கள்...

மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்குவதோடு, நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்பு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இதற்காக நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தை தொடங்கினார். புகையினால் அவதிப்பட்டு, ஆரோக்கியத்தை இழக்கும் பெண்களுக்கு நிவாரணமாக கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் திட்டம் இது. இந்த்த் திட்டத்தில் இப்போது நிரபப்ப்பட்ட கேஸ் சிலிண்டர் மற்றும் சமைப்பதற்கான கேஸ் அடுப்பு ஆகியவை இலவசமாக கொடுக்கப்படுகின்றன.

PM உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு, நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் அடுப்பு பெற முதலில் விண்ணப்பிக்க வேண்டும். pmuy.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று புதிய உஜ்வாலா 2.0 இணைப்புக்கு விண்ணப்பிக்கவும்... 

ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்

அதற்கான தெரிவு அந்த வலைதளத்தில் இருக்கும், அதை கிளிக் செய்யவும். இண்டேன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹெச்பி கேஸ் என பல எண்ணெய் நிறுவனங்களில் எதை தேர்ந்தெடுக்க விரும்பினாலும், அந்த தெரிவை தேர்ந்தெடுக்கவும்.

பிறகு விண்ணப்பத்தில் கோரப்படும் அனைத்து தகவல்களையும் நிரப்பவும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் பெயரில் எல்பிஜி எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இரண்டாவது கட்டத்தில் எல்பிஜி இணைப்புடன், முதல் சிலிண்டரை மீண்டும் இலவசமாக நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

உஜ்வாலா திட்டத்தின் பலனைப் பெற சில  ஆவணங்கள் தேவை. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். 

மானியத்தைப் பெறுவதற்காக, பிபிஎல் கார்டு, வங்கியில் சேமிப்புக் கணக்கு, அடையாள அட்டை (ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் யாருக்கும் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு இருக்கக்கூடாது என்பது இந்த திட்டத்தின் நன்மையை பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை ஆகும்.  

ALSO READ | LPG Booking: சிலிண்டரை புக் செய்யும் ஸ்மார்ட்டான வழிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News