பொதுவாக மழைக்காலம் நன்கு குளிராக இதமாக தான் இருக்கும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்கிற உணர்வு கூட ஏற்படும், ஆனால் இல்லத்தரசிகளுக்கு தான் மழைக்காலம் வந்தாலே கவலையும் கூட சேர்ந்துவிடும். ஏனெனில் மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பது அவர்களுக்கு மிகப்பெரிய டாஸ்க், சில பேச்சிலர்களுக்கும் இது சிரமமான ஒன்று தான். மழைக்காலத்தில் துணிகளை காய வைக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். துணிகளை துவைக்கும் முன்னர் உங்கள் வாஷிங் மெஷின் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பது நல்லது, ஏனெனில் சுத்தமில்லாத வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்தால் பாக்டீரியாக்கள் துணிகளில் ஒட்டிக்கொண்டு துர்நாற்றம் வீச தொடங்கிவிடும். வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை போட்டு மெஷினின் உள்புறத்தை சுத்தம் செய்த பின்னர் துணிகளை சலவை செய்ய போடலாம்.
மேலும் படிக்க | தமிழகத்தில் கனமழை தொடரும்: சென்னையின் நிலை என்ன? வானிலை அறிக்கை
பள்ளி சீருடை அல்லது அலுவலகத்திற்கு போட பயன்படுத்தப்படும் துணிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சீக்கிரமாக துவைத்து உலர்த்தும் முயற்சியில் இறங்குங்கள், மற்ற துணிகளை காலநிலை சற்று மாற தொடங்கியதும் துவைத்து உலர்த்தி கொள்ளலாம். நீங்கள் போட்டிருக்கும் துணிகளில் ஒரு இடத்தில் கறை ஏற்பட்டால் துணி முழுவதையும் துவைக்காமல், கறை படிந்த இடத்தை மட்டும் அலசுங்கள், இதனால் துணியை நீங்கள் சீக்கிரம் உலர்த்திவிடலாம். உள்ளாடைகளை சுத்தமாக துவைத்து நன்கு உலர்த்த வேண்டியது அவசியம், மழைக்காலத்தில் இந்த ஆடைகளை காய வைப்பது சற்று கடினம் தான். அதனால் விலையுயர்ந்த ப்ராவை பயன்படுத்துபவர்கள் ப்ரா வாஷ் பேக்கில் அதனை போட்டு வாஷிங் மெஷினில் சலவை செய்யலாம், இதற்கு கொடுத்தால் தண்ணியும் தேவைப்படாது விரைவில் காய்ந்துவிடும்.
துணிகளை துவைப்பதற்கு முன்னர் 30 நிமிடங்கள் சோப்புத்தூள், வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து ஊறவைத்து பின்னர் துவைப்பதன் மூலம் துணிகளிலுள்ள அழுக்குகள் போவதோடு மழைக்காலத்தில் துணிகளில் வீசக்கூடிய துர்நாற்றங்களும் இல்லாமல் போய்விடும். துணிகள் சற்று ஈரமாக இருந்தால் அதனை அயர்ன் செய்து உலர்த்தலாம் மற்றும் துணிகளை ஒன்றன் மீது ஒன்றாக நெருக்கமாக போடாமல் சற்று இடைவெளி விட்டு துணிகளை உணர்த்துவது நல்லது. ஏசி அறையிலோ அல்லது மின்விசிறியின் கீழோ துவைத்த துணிகளை உலர வைக்கலாம், ஒரே இரவில் ஈரமான துணிகள் ஓரளவு உலர்ந்துவிடும்.
மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் கனமழை: எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் லீவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ