Banks Latest RD Rates: கடந்த ஒரு வருடத்தில், நிலையான வைப்புத்தொகை (FD) திட்டங்களுக்கு மட்டுமின்றி தொடர் வைப்புத்தொகை (RD) திட்டங்களுக்குமான வட்டி விகிதங்கள் உயர்ந்தப்பட்டுள்ளன. சில வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு (RD) 10 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த விஷயத்தில், பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களைத் தேடும் முதலீட்டாளர்கள் இதனை தொடர்ந்து படிக்கவும்.
கடந்த ஒரு வருடத்தில் FD மற்றும் RD திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்ததன் பின்னணியில் உள்ள காரணம், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். கடந்த ஓராண்டில், ரெப்போ விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து (மே 2022), தற்போது 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023இல் வங்கிகள் RD-க்கு எவ்வளவு வட்டி செலுத்துகின்றன?
சூர்யோதாய் சிறு நிதி வங்கி (SSFB)
சூர்யோதாய் சிறு நிதி வங்கி (SSFB) சார்பாக, மூத்த குடிமக்களுக்கு ஐந்தாண்டு RD திட்டத்தில் 9.6 சதவீதம் வட்டியும், பொது முதலீட்டாளர்களுக்கு 9.1 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கு யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் 1001 நாட்களுக்கு 9.5 சதவீத வட்டியும், ஐந்து ஆண்டுகளுக்கு 8.15 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பொது முதலீட்டாளர்களுக்கு 1001 நாட்கள் RD திட்டதிற்கு 9.1 சதவீத வட்டியும், 5 வருட RD திட்டத்திற்கு 7.65 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
எஸ்பிஐ
மூத்த குடிமக்கள் எஸ்பிஐ வங்கியில் இருந்து 5 ஆண்டு RD திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில் பொது முதலீட்டாளர்களுக்கு 6.6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சி
மூத்த குடிமக்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி மூலம் ஐந்தாண்டு RD திட்டதிற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வங்கி மற்ற முதலீட்டாளர்களுக்கு 7 சதவீத வட்டியை வழங்குகிறது. இது தவிர, மூத்த குடிமக்களுக்கு 7.5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கான FD திட்டங்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ வங்கியின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு RD திட்டத்தில் 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மற்ற முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீத வட்டி வங்கியால் வழங்கப்படுகிறது.
வங்கிகளை போல அஞ்சல் அலுவலகத்திலும்...
அஞ்சல் அலுவலகத்தில் RD திட்டம் 5 ஆண்டுகளுக்கானது. ஒரு முறை திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.100 அஞ்சலகத்தில் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு ரூ.1200 டெபாசிட் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.6000 முதலீடு செய்வீர்கள். 6.2 சதவீத வட்டியின் படி, உங்களுக்கு ரூ.1043 வட்டியாக மட்டும் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6000 மற்றும் அதன் வட்டியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.7043 கிடைக்கும்.
மேலும் படிக்க | வாடிக்கையாளர் கவனத்திற்கு! ஜூன் முதல் வங்கிகளில் அதிரடி மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ