முகத்தில் எண்ணெய் வடிவது பலருக்கு பிரச்னையாக இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு பலரும் க்ரீம்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அப்படி க்ரீம்களை பயன்படுத்துவதால் வேறு சில பிரச்னைகளும் சருமத்திற்கு உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே க்ரீம்களை பயன்படுத்தாமல் முகத்தில் எண்ணெய் வடிவதால் வரும் துவாரங்களை போக்கலாம்.
முகம் கழுவுதல்
முகத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது முகம் கழுவுதல். ஈரப்பதம் அதிகரித்து, அழுக்கு, வியர்வை, எண்ணெய் மற்றும் தூசுகள் முகத்தின் துளைகளை அடைத்து, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிளை உருவாக்கும். இதனால், உங்கள் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். வேம்பு, துளசி மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையான மூலப்பொருட்களை கொண்ட ஒரு மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். இவற்றுடன் தினமும் இரண்டு முதல் மூன்று முறை க்ளென்சரைப் பயன்படுத்தலாம்.
ஈரப்பதம்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மாய்ஷ்சரைசரைப் பயன்படுத்தக்கூடாது என்று பலர் கூறுவார்கள். ஆனால், அது அப்படியில்லை. எண்ணெய் சருமத்திற்கு மாய்ஷ்சரைசர் மிகவும் அவசியம். சரியான மாய்ஷ்சரைசர் சருமத்தின் இயற்கையான நீரேற்றத்தை உறுதி செய்து, சரும பிரச்னைகளை தடுக்கும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்!!
கூடுதலாக, இது உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்குவதோடு சுருக்கங்களைத் தவிர்க்கவும் செய்கிறது. மேலும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும்.
மேக்கப்
மேக்கப் மீதான மோகம் சமூகத்தில் பலருக்கும் இருக்கிறது. தங்களை அழகாக காட்டிக்கொள்வதற்காக மேக்கப் போட்டுக்கொண்டாலும், மழைகாலங்களில் மேக்கப் அணிவது பல நேரங்களில் சரியான தேர்வாக இருக்காது. எனவே இதுபோன்ற நேரங்களில் நீர் எதிர்ப்பு மேக்கப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
மேலும் படிக்க | முகப்பருக்களை உடனே போக்க வேண்டுமா?... இயற்கை வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க
மேலும் முகத்தின் துளை அடைப்பு மற்றும் முகப்பருவைத் தடுக்க படுக்கைக்கு செல்வதற்கு முன் துளசி மற்றும் வேம்பு கொண்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தினால் எண்ணெய் வடிவதால் வரும் துவாரங்களை போக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ