நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியானது... சென்னைக்கு எந்த இடம்?

நாட்டின் தூய்மையான நகரங்களின் மதிப்பீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த மதிப்பீடுகளை நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார், இதில் நாட்டின் ஐந்து பெரிய நகரங்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

Last Updated : May 20, 2020, 08:43 AM IST
நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியானது... சென்னைக்கு எந்த இடம்? title=

நாட்டின் தூய்மையான நகரங்களின் மதிப்பீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த மதிப்பீடுகளை நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார், இதில் நாட்டின் ஐந்து பெரிய நகரங்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஐந்து நட்சத்திர மதிப்பிடப்பட்ட நகரங்களில், சத்தீஸ்கரில் அம்பிகாபூர், குஜராத்தில் ராஜ்கோட், கர்நாடகாவின் மைசூர் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

புது டெல்லியில் குப்பை இல்லாத நகரங்களின் பட்டியலை வெளியிட்ட ஹர்தீப் சிங், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தூய்மையைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது என வலியுறுத்தினார்.

ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெறும் ஐந்து நகரங்களின் பெயர்கள்: -

• அம்பிகாபூர், சத்தீஸ்கர்
• ராஜ்கோட், குஜராத்
• மைசூர், கர்நாடகா
• இந்தூர், மத்தியப் பிரதேசம்
• நவி மும்பை, மகாராஷ்டிரா

இந்த நகரங்களைத் தவிர, நாட்டின் சுமார் 70 நகரங்களுக்கு ஒன் ஸ்டார் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கர்னல், புது டெல்லி, திருப்பதி, விஜயவாடா, சண்டிகர், பிலாய் நகர், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு மூன்று நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரமும் அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருவதாக ஹர்தீப் சிங் கூறினார். இந்த விஷயத்தில், பல அம்சங்களை மனதில் கொண்டு, இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தூய்மையான, ஆரோக்கியமான, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் நகரங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நகரத்திற்குமான மதிப்பீட்டில் அதன் கிராமத்திற்கும் சொந்த பங்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நகர்ப்புற இந்தியாவிற்கான வருடாந்திர தூய்மை கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேஷன் (SS)-ஐ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது, “ஆரோக்கியமான போட்டியின் மூலம் நகர்ப்புற தூய்மையை மேம்படுத்துவதில் இது மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு தரவரிசை முறை என்பதால், நமது நகரங்கள் பல, விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டாலும், சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News