தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று முதல் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும். வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும்.
தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் இந்த தேர்வை ரிலாக்ஸாக எதிர்கொள்ள சில டிப்ஸ் உங்களுக்காக....
இதுவரை படிக்காத பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை மீண்டும் நன்றாக படித்தால் நேரம் வீணாகாது.
தேர்வின் போது மனதில் முதலில் இருக்க வேண்டிய விஷயம் நேர்மறை எண்ணங்கள். மற்றவர்களை விட உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளும் நேர்மறையான உற்சாகம்தான் உங்களை வெற்றியடைய வைக்கும்.
உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.
அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.
தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.
தேர்வின் போது கட்டாயம் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். நன்கு தூங்கி ஓய்வெடுத்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும். இதனால் நீங்கள் படிக்கும் விஷயம் எளிதாக மனப்பாடமாகும்.
ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.
தேர்வுக்கு முன் படித்தவற்றை ஒரு மேற்பார்வைப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்காக பதட்டமான மனநிலையில் பார்க்காதீர்கள் பின் எல்லாம் மறந்த நிலையில்தான் இருப்பீர்கள்.
தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்.
எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.