New Income Tax Slabs: உங்கள் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் வரம்பு எவ்வளவு? ரூ. 50,000 அல்லது ரூ. 52,500?

Standard Dedution: சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தாலும் நிலையான விலக்குகளைப் பெறலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2023, 10:55 AM IST
  • நிலையான விலக்கு எவ்வளவு? ரூ.50,000 அல்லது ரூ.52,500?
  • புதிய வருமான வரிமுறையின் கீழ் நிலையான விலக்கை யார் பெற முடியும்?
  • சம்பளம் பெறும் நபர்கள் எவ்வளவு நிலையான விலக்கு பெறுவார்கள்?
New Income Tax Slabs: உங்கள் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் வரம்பு எவ்வளவு? ரூ. 50,000 அல்லது ரூ. 52,500? title=

இந்த மாதம் 1 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் பல வித அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக, சாமானியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கான பல நற்செய்திகள் இதில் இருந்தன. பட்ஜெட் 2023-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, புதிய வருமான வரி முறையில், நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் நீட்டிக்கப்பட்டது. சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தாலும் நிலையான விலக்குகளைப் பெறலாம்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2023 அன்று பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்தபோது, "எனது மூன்றாவது முன்மொழிவு சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ஓய்வூதியம் பெறுவோருக்கானது. அவர்களுக்காக புதிய வரி விதிப்பு முறைக்கு நிலையான விலக்கின் பலனை நீட்டிக்க நான் முன்மொழிகிறேன். ரூ. 15.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் கொண்ட ஒவ்வொரு சம்பளம் பெறும் நபரும் ரூ.52,500-க்கான பலனை பெறுவார்" என்று  கூறினார்.

நிலையான விலக்கு எவ்வளவு? ரூ.50,000 அல்லது ரூ.52,500?

புதிய வரி முறையின் கீழ் அவர்கள் கோரக்கூடிய தகுதி மற்றும் நிலையான விலக்கு அளவு குறித்து வரி செலுத்துவோர் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. இந்த விலக்கு 50,000 ரூபாயா அல்லது 52,500 ரூபாயா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. மேலும், இந்த விலக்கு வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்குமா அல்லது ரூ.15.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. 

மேலும் படிக்க | Income Tax New Slabs: வரி செலுத்துபவர் எவ்வளவு வரியை சேமிக்க முடியும்?

பட்ஜெட் 2023: புதிய வருமான வரிமுறையின் கீழ் நிலையான விலக்கை யார் பெற முடியும்?

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா, பட்ஜெட்டுக்கு பிந்தைய விளக்கத்தில், புதிய வரிமுறையில் சம்பளம் பெறும் அனைத்து வரி செலுத்துவோருக்கும் நிலையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். "இந்தியாவில் சுமார் 3.5 கோடி சம்பளம் பெறும் வரி செலுத்துவோர் உள்ளனர். மேலும் மாத சம்பளம் பெறும் அனைத்து வரி செலுத்தும் நபர்களுக்கும், புதிய வரிமுறையை தேர்வு செய்தால், பழைய வரி முறைக்கு நிகரான பலன்கள் கிடைக்கும். ஏனெனில் புதிய வரி முறையில், நிலையான விலக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆகையால் இரு வரி முறைகளிலும் சமத்துவமான நிலை உள்ளது” என்று குப்தா கூறியதாக பிடிஐ மேற்கோளிட்டுள்ளது. 

சம்பளம் பெறும் நபர்கள் எவ்வளவு நிலையான விலக்கு பெறுவார்கள்?

புதிய வரி முறையைத் தேர்வுசெய்தால், சம்பளம் பெறும் நபர்கள் ரூ.50,000 நிலையான விலக்கு பெறுவார்கள்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எவ்வளவு நிலையான விலக்கு கிடைக்கும்?

பட்ஜெட் 2023 இன் படி, ஓய்வூதியம் பெறுவோர் புதிய வருமான வரி முறையின் கீழ் தங்கள் சம்பளம்/ஓய்வூதிய வருமானத்தில் இருந்து ரூ. 50,000 நிலையான விலக்கு கோரலாம்.

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எவ்வளவு நிலையான விலக்கு கிடைக்கும்?

பட்ஜெட் 2023 முன்மொழிவின்படி, குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ரூ.15,000 நிலையான விலக்கு பெறுவார்கள்.

மேலும் படிக்க | Budget 2023: புதிய வருமான வரி அடுக்குகள் - உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News