இந்துக் கோவில்களில் சுவாமிக்கு நிவேதனம் அதாவது படையல் போடுவது வழக்கமான ஆனால் சிறப்பான நடைமுறை. அவை கோவிலுக்கு கோவில், அதன் வழக்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சில பிரபல கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவுப்பொருட்கள் இவை…
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதனம் செய்யும் கோவில் கேரள மாநிலம் கொட்டாரக்கரா ஆலயம். காலை முதல் இரவு வரை அப்பத்தை நிவேதனாம ஏற்கும் கணபதி இவர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.
திருப்பதி என்றாலே லட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமானது தயிர்சாதம் தான் தெரியுமா? வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்தாண்டும் பிரசாதம் மண் சட்டியில் வைக்கப்படும் தயிர்சாதம் தான்.வேறு எந்த நைவேத்யமும் இறைவனுக்கு மிக நெருக்கத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை.
Also Read | சென்னையின் முஸ்லிம் வர்த்தகர் அயோத்தி ராமர் கோயிலுக்கு 1 லட்சம் நன்கொடை
திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதம் படைக்கப்படும்.
கேரள மாநிலம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாக படைக்கப்படுகிறது.
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியும் நிவேதிக்கப்படுகிறது.
முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.
ALSO READ | எந்த தெய்வத்திற்கு என்ன வகை உணவு விரும்பமானது?
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.
திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவது தான் கூட்டாஞ்சோறு.
கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.
நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.
கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.
குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவிக்கு அருகில் இருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திற்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.
Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR