வீட்டின் இந்த திசையில் கடிகாரத்தை வைத்தால் பண வரவு பெருகுமாம்...

பொதுவாக மக்கள் தலையணையின் கீழ் தங்கள் கைகடிகாரங்களை வைத்து தூங்குவதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி, தலையணையின் கீழ் ஒருபோதும் கடிகாரத்தை வைத்து தூங்கக்கூடாது.

Last Updated : Jun 27, 2020, 02:27 PM IST
  • வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு திசையின் சுவரில் ஒரு கடிகாரத்தை வைக்கக்கூடாது. ஏனெனில் தெற்கு திசை எமனின் திசையாக பார்க்கப்படுகிறது,
  • இந்த திசையில் ஒரு கடிகாரத்தை வைப்பதன் மூலம், வணிக வழியில் தடைகள் வரத் தொடங்குகின்றன.
  • மேலும் இது வீட்டின் மக்கள் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. வீட்டின் தெற்கு திசையைத் தவிர, வீட்டின் பிரதான கதவிலும் ஒரு கடிகாரத்தை வைக்க கூடாது.
வீட்டின் இந்த திசையில் கடிகாரத்தை வைத்தால் பண வரவு பெருகுமாம்... title=

பொதுவாக மக்கள் தலையணையின் கீழ் தங்கள் கைகடிகாரங்களை வைத்து தூங்குவதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி, தலையணையின் கீழ் ஒருபோதும் கடிகாரத்தை வைத்து தூங்கக்கூடாது.

READ | சமூக ஊடக விளம்பரங்களை 30 நாட்களுக்கு நிறுத்து வைப்பதாக Coca Cola அறிவித்துள்ளது...

கை கடிகாரத்தை தலையணையின் கீழ் வைத்திருப்பது அல்லது கடிகடிகாரத்தை தலையணைக்கு மிக அருகில் வைத்திருப்பது அவர்களின் தூக்கத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அதிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகளால் மூளை மற்றும் இதயத்தில் மோசமான விளைவை பெறலாம். இந்த அலைகள் அறையில் எதிர்மறை சக்தியை உருவாக்குகின்றன, இது மன அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை உண்டாக்குகிறது. மேலும், இது எண்ணங்களையும் சித்தாந்தங்களையும் எதிர்மறையாக மாற்றுகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • கடிகாரத்திற்கான எதிர்மறை திசை...

வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு திசையின் சுவரில் ஒரு கடிகாரத்தை வைக்கக்கூடாது. ஏனெனில் தெற்கு திசை எமனின் திசையாக பார்க்கப்படுகிறது, இந்து வேதங்களில், எம கோமிருத்தின் கடவுளாகவும் கருதப்படுகிறது. இந்த திசையில் ஒரு கடிகாரத்தை வைப்பதன் மூலம், வணிக வழியில் தடைகள் வரத் தொடங்குகின்றன. மேலும் இது வீட்டின் மக்கள் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. வீட்டின் தெற்கு திசையைத் தவிர, வீட்டின் பிரதான கதவிலும் ஒரு கடிகாரத்தை வைக்க கூடாது.

READ | உங்கள் Instagram கணக்கை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி? சில எளிய வழிகள்...

  • கடிகாரத்திற்கான சரியான திசை எது?

வாஸ்து சாஸ்திரத்தின்படி கடிகாரம் ஆனது, வீடு அல்லது அலுவலகத்தின் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு சுவரில் வைக்கப்பட வேண்டும். இந்த திசைகள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதற்கு வேலை செய்கின்றன. இதைச் செய்வதன் மூலம் வீட்டில் இருப்பவர்களின் நேரம் நன்றாகவே இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் அனைத்து வேலைகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடைபெறும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Trending News