ஷாப்பிங் என்பது உங்களுக்கு விருப்பமான ஒன்று இல்லை என்ற போதிலும் தொடர்ந்து ஷாப்பிங் செய்ய விரும்பினால், அதுவும் ஒருவகை மனநோய் தான் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்!
பண்டிகை காலங்களில் ஷாப்பிங் செய்வது பொதுவானது. அது வீட்டின் தேவையா அல்லது உங்களுக்கும் குடும்பத்திற்கும் தேவையா என்பதன் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் எல்லோரும் ஷாப்பிங்கிற்கு செல்ல விரும்புகிறார்கள், அதவாவது தங்களுக்கு தேவையென ஏதும் இல்லாத போதிலும் ஷாப்பிங் செல்ல விரும்புகிறார். எந்த தேவையும் இல்லாத போது நீங்கள் ஷாப்பிங் செல்ல விரும்பினால் அதுவும் ஒரு வகையான நோய் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
சிகிச்சை தேவைப்படும் நோய்களின் பட்டியலில் அதிகமான ஷாப்பிங் சேர்க்கப்பட்டுள்ளது. இது மருத்துவ அடிப்படையில் கட்டாய வாங்குதல் கோளாறு அல்லது ஓனியோமேனியா (Compulsive Buying Disorder or Oniomani) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் பலர் உள்ளனர், ஆனால் அவர்கள் அதை அங்கீகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 2015-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு கட்டுரை படி, வளரும் நாடுகளில் 20 பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார். ஆண்களை விட பெண்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
கட்டாய கொள்முதல் கோளாறின் ஆரம்பம் இளம் வயதிலேயே தொடங்குகிறது மற்றும் முப்பது வயதிற்குப் பிறகு ஒருவர் இந்த அறிகுறிகளை பெறுவது அரிதாகவே காணப்படுகிறது. இந்த பிரச்சினைகள் காலப்போக்கில் அதிகரிக்கின்றன என்பதையும் இந்த ஆராய்ச்சி கட்டுரை காட்டுகிறது.