பெண்களுக்கு பொதுவாகவே ஹேண்ட் பேக் என்பது மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு, கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்த மக்கள் முதன்முதலாக ஹேண்ட்பேக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து இப்போது வரை பல்வேறு வடிவங்கள், பல்வேறு நிறங்கள், பல்வேறு வகைகள் என ஹேண்ட்பேக்கில் பல புதுமைகள் வந்துவிட்டன. இந்நிலையில் பிரான்சை சேர்ந்த Louis Vuitton என்ற பிராண்ட் பெயரில் MSCHF நிறுவனம் ஒரு ஹேண்ட்பேக்கை தயாரித்துள்ளது. MSCHF நிறுவனத்தை பொறுத்தவரை தனித்துவமான பொருள்களை தயாரிப்பதில் வல்லமை பெற்றது. குறிப்பாக அந்த நிறுவனம் பெரிய சிகப்பு கலர் ஷூஸ், சாத்தான் செருப்பு போன்றவற்றை தயாரித்து ஃபேஷன் உலகில் புதுமை படைத்தது. தற்போது ஹேண்ட் பேக்கில் ஒரு புதுமையை செய்துள்ளது.
மேலும் படிக்க | Viral Video: காதலிக்காக உயிரை விட்ட பறவை.... கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வீடியோ!
2 proton polimerisation என்ற முறையை பயன்படுத்தி 3டி print micro scale plasticஐ கொண்டு பால் பச்சை நிறத்தில் Louis Vuitton லோகோவோடு இந்த ஹேண்ட் பேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு பற்றி சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறியது எனக்கு கூறலாம். இந்த ஹேண்ட்பேக் 657 macrometer நீளமும் 222macrometer அகலமும் 700macrometer உயரம் கொண்டதாக இருக்கிறது. ஒரு சர்க்கரையின் சிறிய துகளை ஒரு விரலில் எடுத்து வைத்தால் அது எந்த அளவு இருக்குமோ அதுதான் அந்த ஹேண்ட் பேக்கின் அளவு. மேலும் ஒரு ஊசியின் ஓட்டையில் இந்த ஹேண்ட் பேக்கை நுழைத்தால் அது சென்றுவிடும் அளவுக்கு சிறியது என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ஹேண்ட்பேக்கை கண்ணால் பார்ப்பது கடினம், ஆகவே மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்த்தால் மட்டுமே இதன் வடிவம் அழகாக தெரியும்.
இந் நிலையில் மைக்ரோஸ்கோபால் பார்க்கக்கூடிய இந்த ஒரு ஹேண்ட்பேக் இந்திய ரூபாயின் மதிப்பின்படி 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. மிகவும் காஸ்ட்லியான இந்த குட்டி ஹேண்ட் பேக் பற்றிய தகவல் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் கூகுளில் இது பற்றி மும்முரமாக தேடி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ