"சர்கார்" சரவெடி! ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில் வெளியீடா?

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் 80 நாடுகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. 

Last Updated : Nov 1, 2018, 09:23 AM IST
"சர்கார்" சரவெடி! ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில் வெளியீடா? title=

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் 80 நாடுகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. 

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது. மேலும் இந்த படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என இந்தப்படம் குறித்து வெளியான ஒவ்வொரு அறிவிப்பும் உலக அளவில் சாதனையை படைத்தன.

இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திரைப்படத்தின் கதை தனது கதை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண்  ராஜேந்திரன் என்பவர் மனுத்தாக்கள் செய்தார். இந்த மனுவை கடந்த 26-ம் தேதி விசாரணை செய்த நீதிபதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

இதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 30ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

சர்கார் பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்க பட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, அனைத்து பிரச்னையில் சமரசம் ஏற்பட்டு தீபாவளிக்கு சரவெடியாக திரைக்கு வருகிறது விஜய்யின் சர்கார்.

இந்நிலையில் தீபாவளிக்கு சரவெடியாக திரைக்கு வர இருக்கும் சர்கார் திரைப்படம் சுமார் 80 நாடுகளில், 1200 திரையரங்குகளுக்கும் மேல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் இதனை முடிவு செய்திருக்கிறார்கள். 

Trending News