Amazon மற்றும் Flipkart -ல் அதிரடியாக தொடங்கும் Republic Day sale!

இந்த ஆண்டு வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, முன்னதாகவே Amazon மற்றும் Flipkart-ல் Republic Day sale தொடங்கப்பட இருக்கிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 03:48 PM IST
  • Amazon மற்றும் Flipkart ஷாப்பிங் - Republic Day sale ஆபரை வழங்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த முறை நோய் தொற்றால் முன்னதாகவே தொடங்குகிறது.
Amazon மற்றும் Flipkart -ல் அதிரடியாக தொடங்கும் Republic Day sale!  title=

கோவிட் தொற்று அதிகளவில் பரவி வருவதாலும், சரியான நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதாலும், Amazon மற்றும் Flipkart ஷாப்பிங் தளங்கள் இந்த வருட Republic Day saleஐ முன்னதாகவே தொடங்கிய நிலையில் 4-5 நாட்களுக்கு இந்த ஆபரை வழங்க திட்டமிட்டுள்ளது.  இந்த இரண்டு மிகப்பெரிய ecommerce தளங்களும் இந்த அதிரடி ஆபரை ஜனவரி 16 அல்லது 17ம் தேதிகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது. 

ALSO READ | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு நற்செய்தி! விரைவில் ரூ.2 லட்சம் கிடைக்கும்

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஆன்லைன் தளங்களில் கடந்த ஆண்டைவிட வியாபாரம் குறைந்துள்ளது.  இதனை மேம்படுத்த நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது.  பொதுவாக Amazon மற்றும் Flipkart தளங்களில் ஜனவரி 20-22 ஆகிய தேதிகளில்  Republic Day sale தொடங்கப்பட்டு 3-4 நாட்கள் நடைபெறும், ஆனால் இந்த முறை நோய் தொற்றால் முன்னதாகவே தொடங்குகிறது.  

தொற்று பரவல் காரணமாக மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆன்லைன் விற்பனை தளங்கள் Republic Day saleஐ முன்னதாகவே தொடங்கிவிட்டது என்று SPPL (Super Plastronics Pvt Ltd) நிறுவனத்தின் உயர் அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறியுள்ளார்.  மேலும் ஏற்கனவே ஆப்லைனில் பொருட்களின் விற்பனை மந்தமாகிவிட்டது, அதனால் இது ஆன்லைன் விற்பனைக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மக்களுக்கு பாதுகாப்பானது என்பதை ஒவ்வொரு மாநில அரசாங்கமும் உணர்ந்துவிட்டது.  டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவின் போதும் ஆன்லைன் பொருட்கள் டெலிவரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தமிழத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி-9) ஊரடங்கில் ஆன்லைன் டெலிவரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  கோவிட் தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற யோசிப்பார்கள், அதனால் இதுபோன்ற ஆன்லைன் டெலிவரிகளையே மக்கள் அதிகம் நாடுவர் என்று கூறியுள்ளார்.

ALSO READ | வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கணுமா? முந்துங்கள்: 10% விலை உயர்வு விரைவில்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News