Real-life tarzan: 41 ஆண்டுகளை காட்டில் கழித்த அசல் டார்ஜான்

1972 இல் வியட்நாம் போரின்போது மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்தபின் தனது மகனுடன் வெளியேறினார் ஒருவர். தனது தந்தையுடன் நாட்டை விட்டு வெளியேறிய சிறு குழந்தை தான் ஹோ வான் லாங் (Ho Van Lang).

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2021, 05:01 PM IST
  • 41 ஆண்டுகளை காட்டில் கழித்த அசல் டார்ஜான்
  • 1972 இல் வியட்நாம் போது குடும்பத்தை இழந்து காட்டுக்கு சென்றார் நவீன டார்ஜான்
  • பெண்கள் பற்றியோ செக்ஸ் பற்றி எதுவுமோ தெரியாது
Real-life tarzan: 41 ஆண்டுகளை காட்டில் கழித்த அசல் டார்ஜான் title=

1972 இல் வியட்நாம் போரின்போது மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்தபின் தனது மகனுடன் வெளியேறினார் ஒருவர். தனது தந்தையுடன் நாட்டை விட்டு வெளியேறிய சிறு குழந்தை தான் ஹோ வான் லாங் (Ho Van Lang).

ஹோ வான் லாங் 40 வருடங்களுக்கும் மேலாக தனது தந்தையுடன் காட்டில் வசித்து வந்தார், பெண்கள் இருக்கிறார்கள் என்பதோ செக்ஸ் என்றால் என்னவென்றோ ஹோ வான் லாங் என்ற இந்த டார்ஜனுக்குத் தெரியாது. தற்போது 49 வயதான ஹோ வான் லாங், தனது தந்தை மற்றும் சகோதரருடன் குவாங் நங்கை மாகாணத்தில் உள்ள டே டிரா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் 41 ஆண்டுகள் வாழ்ந்தார்.

1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது அமெரிக்காவின் குண்டுவீச்சில் தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்தார் ஹோ வானின் தந்தை. அதையடுத்து தனது இரு குழந்தைகளுடன் வனாந்தரத்திற்கு சென்று வசிக்கத் தொடங்கினார். அங்கு தேன், பழம் மற்றும் வன உயிரினங்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.  2013 ஆம் ஆண்டில் இந்த மூவரும் காட்டில் இருந்து மீட்கப்பட்டு ஒரு கிராமத்து வீட்டில் குடியமர்த்தப்பட்டனர்.  

Also Read | தியானம் செய்யும்போது தூக்கம் வர என்ன காரணம்?

"மக்களைப் பார்க்கும்போது அவர்கள் தொலைவிலேயே இருந்துவிடுவார்கள்.  லாங்கின் தந்தையின் மனதில் அதிக பயம் இருந்தது. அவர் வியட்நாம் போர் முடிந்துவிட்டது என்பதை நம்பவில்லை" என்று டோகாஸ்டேவேயின் நிர்வாக இயக்குனர் ஆல்வாரோ செரெசோ கூறுகிறார். 2015 ஆம் ஆண்டில், அவர் இந்த குடும்பத்தை சந்தித்தார்.

"ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இவர் அறிந்துக் கொண்டாலும், ஆண் பெண்ணுக்கு இடையிலான அத்தியாவசிய வேறுபாட்டை ஹோ வான் லாங் இன்னும் அறியவில்லை. லாங்கிற்கு ஒருபோதும் பாலியல் ஆசை வந்ததில்லை, இனப்பெருக்க உணர்வு அவருக்குள் எழவில்லை" என்று ஆல்வாரோ செரெசோ கூறுகிறார்.

வெளிப்படையாக சொல்வதென்றால், ஹோ வான் லாங்கின் அப்பா பாலியல் விஷயங்களைப் பற்றி ஒருபோதும் சொன்னதில்லை. அவருடன் காட்டில் இருந்தபோது, வெளவால்களையும் எலிகளின் தலைகளையும் சாப்பிட்ட்டார்.

Also Read | ஒரு கோடி ரூபாயின் மதிப்பு 10, 15, 20 ஆண்டுகளில் என்ன? தெரியுமா

தந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கும் வரை லாங்கிற்கு வாழ்க்கை நன்றாக இருந்தது.தந்தையின் மோசமான மனநிலை காரணமாக லாங் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்துடனும் பதட்டத்துடன் இருந்தார்.  

”லாங் காட்டிலேயே கழித்ததால் பல அடிப்படை சமூக வாழ்க்கையைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை. நல்லதற்கும் கெட்டதற்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியாது. லாங் ஒரு குழந்தையைப் போல அவருக்கு எதுவும் தெரியாது" என்று செரெசோ கூறினார்.

Also Read | Power of words: 86 கோடி வார்த்தை பேசுவது யார் தெரியுமா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News