ரேஷன் கார்டில் இதை புதுப்பிப்பது மிக அவசியம்: வீட்டில் இருந்தபடியே செய்யலாம்

Ration Card Update: ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக எளிது. வீட்டில் இருந்தபடியே இந்த வேலையை எளிதாக செய்து முடிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2022, 10:45 AM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கும்.
  • அனைத்து ரேஷன் கார்டுகளும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • மொபைல் எண்ணை ரேஷன் கார்டில் புதுப்பிப்பது மிக அவசியம்.
ரேஷன் கார்டில் இதை புதுப்பிப்பது மிக அவசியம்: வீட்டில் இருந்தபடியே செய்யலாம் title=

நமது நாட்டு மக்களின் முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டும் ஒன்றாக கருதப்படுகின்றது. இதன் மூலம், அரசிடமிருந்து இலவச ரேஷன் மக்களுக்கு கிடைக்கிறது. முன்னர், டீலர் ரேஷன் கார்டுக்கு ஏற்ப ரேஷன் பொருட்களை வழங்கி வந்தார். ஆனால் தற்போது இந்த செயல்முறை டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. 

இப்போது ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி, இதோ ஈசி வழிகடைக்காரர் கைரேகை பதிந்து ரேஷன் தருகிறார். ஏனெனில் தற்போது ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷன் கார்டில் தவறான மொபைல் எண்ணை அல்லது பழைய எண்ணை உள்ளிட்டால், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். 

ஆகையால், உங்கள் ரேஷன் கார்டில் சரியான மொபைல் எண் இருக்க வேண்டியது அவசியமாகும். தேவைப்பட்டால், சரியான மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் புதுப்பிப்பது மிக அவசியம். இதை செய்வதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.

இந்த பணியை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்கலாம்

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக எளிது. வீட்டில் இருந்தபடியே இந்த வேலையை எளிதாக செய்து முடிக்கலாம். உங்கள் ரேஷன் கார்டில் பழைய மொபைல் எண் இருந்தால், ரேஷன் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெற முடியாது. ஒவ்வொரு நாளும், பல முக்கிய அப்டேட்கள் செய்திகள் மூலம் கார்டுதாரர்களுக்கு துறை மூலம் அனுப்பப்படுகிறது.

மொபைல் எண்ணை இப்படி அப்டேட் செய்யவும்

1. மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx என்ற இந்த தளத்திற்குச் செல்லவும். 

2. உங்கள் முன் ஒரு பேஜ் திறக்கும். ‘உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்’ என இங்கே எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.

3. இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள காலமில் உங்கள் தகவலை நிரப்பவும்.

4. இங்கே முதல் வரிசையில், ‘குடும்பத் தலைவரின் ஆதார் எண்/NFS ஐடி’-யை எழுதவும்.

மேலும் படிக்க | Naukri தளத்தில் அதிக WFH வேலைகளை தேடிய இந்தியர்கள்! 

5. இரண்டாவது பத்தியில் ரேஷன் கார்டு எண்ணை எழுதவும்.

6. மூன்றாவது பத்தியில் குடும்பத் தலைவரின் பெயரை எழுதவும்.

7. கடைசி பத்தியில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேவ் செய்யவும். 

8. இப்போது உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும். ஒரே நாடு ஒரே அட்டை திட்டம் ஜூன் 1, 2020 முதல் செயலில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 

ஜூன் 1, 2020 முதல், நாட்டின் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு' என்ற ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நாம் எந்த மாநிலத்தில் இருந்தாலும், அங்கு ரேஷன் வாங்கிக்கொள்ளலாம். அதாவது நாம் எங்கு இருந்தாலும், உணவுப் பொருட்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இத்திட்டம் ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், திரிபுரா, பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன்-டியூ ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Salary Hike: பணியாளர்களுக்கு வாழ்த்துகள்! அனைவருக்கும் சம்பளம் மிக அதிகமாக உயரப்போகுது! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News