குழந்தை திருமண சட்டம் என்றால் என்ன? மீறினால் என்ன தண்டனை வழங்கப்படும்?

சிதம்பரத்தில் பால்ய வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் குழந்தை திருமணம் பெருகியுள்ளது. குழந்தை திருமண சட்டம் குறித்த சில தகவல்கள். 

Written by - Yuvashree | Last Updated : May 27, 2023, 05:56 PM IST
  • சிதம்பரத்தில் குழந்தை திருமணம் பெருகியுள்ளது.
  • குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்றால் என்ன?
  • மீறினால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
குழந்தை திருமண சட்டம் என்றால் என்ன? மீறினால் என்ன தண்டனை வழங்கப்படும்?  title=

சிதம்பரத்தில் பால்ய வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் குழந்தை திருமணம் பெருகியுள்ளது. இதையடுத்து, குழந்தை திருமண சட்டம் குறித்தும் அதை மீறினால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்தும் பார்க்கலாமா? 

அனைவரது வாழ்விலும் குழந்தை பருவம் என்பது சொர்க்கத்தில் உள்ள மேகத்தில் மிதப்பது போன்றது. ஆந்த இனிமையான பருவத்தை இழக்க நேர்வது என்பது பறக்க மறந்த கூண்டு பறவை போன்றது. அப்படி பல குழந்தைகள் பறப்பதை மறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, குழந்தை திருமணம். இந்த திருமணம் சட்டத்தை மீறிய செயல் என்பதை அறிந்தும் இதை இன்னும் சிலர் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு செய்வது, குழந்தையின்  வாழ்க்கை சமூகரீதியாகவும் உளவியல் ரீதியாக பாதிக்கும். இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாத சிலர், ஒன்றுமறியாத,  முடிவெடுக்க தெரியாத வயதில் உள்ள குழந்தைகளை பால்ய திருமணத்தில் ஈடுபடுத்துகின்றனர். குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என தெரிந்தும் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத்தடுக்க இதுகுறித்த சட்டத்தை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். 

குழந்தை திருமண தடுப்பு சட்டம்:
குழந்தை திருமண  தடுப்பு சட்டத்தின்படி (The Prohibition of Child Marriage Act 2006) 18 குறைவாக  உள்ள பால்ய வயதினருக்கு  திருமணம் நடுக்கும்பட்சத்தில் 
அது தண்டனை குற்றமாக கருதப்படுகிறது. குழந்தை திருமணம் செய்ததோலோ செய்துவைதோலையோ இரண்டு ஆண்டுகள் சிறை  தண்டனையோடு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. திருமணத்தில் பங்கேற்கும்  பெற்றோர்,  குழந்தையை சார்ந்ததவர், உறவினர் என அனைவரும் இந்த தண்டனைக்கு உரியவர்களாவார்கள். இந்த சட்டம் இன்னும் கடுமையாக்க பட வேண்டும் என்றும் இந்த வகையான செல்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | பொதுநலனுக்கு பயன்படும் புரட்சிகரமான செயலி:சமூக ஆர்வலர் ஏ. நாகராஜ் அறிமுகம் செய்து வைத்தார்

தேசிய குடும்ப நல ஆய்வு:

தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS)  2019 முதல் 2021 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 20 முதல் 24 வரை வயது உள்ள பெண்களில் 12.8% சதவீத  பெண்ககளுக்கு 18 வயதுக்குள் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை 23.3%   சதவீத  பெண்ககளுக்கு 18 வயதுக்குள் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.  இவை அனைத்தும் வெளி உலகிற்கு தெரிந்தவை, இன்னும் எத்தனை குழந்தை திருமணங்கள் வெளி உலகத்திற்கு வாராமல்  நடந்திருக்கிறது என்று கணக்கெடுக்கப்படவில்லை. 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூறியுள்ளதாவது: நாமக்கல், கடலூர், திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக 
கூறப்பட்டுள்ளது. இதில்  நாமக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

நிறுத்தப்பட்ட  குழந்தைத் திருமணங்கள்

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 2,200 க்கும்  மற்றும் 2020   ஆம் ஆண்டில் 3208  மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இருந்து RTI மூலம் தகவல் வெளிவந்துள்ளது.

சிதம்பரத்தில் அவலம்;

சிதம்பரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பால்ய வயதில் இருக்கும் பலருக்கு குழந்தை திருமணம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார் பல திடிக்கிடும் தகவல்களை குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தெரிந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட ஒரு சிலர் சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதே இல்லை என்றும், தீட்சிதர்களின் மீது போடப்பட்டுள்ளது பொய் புகார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற குழந்தை திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வசமாக சிக்கியுள்ளது. 

போலீஸார் கடந்த ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணையில் கிடுக்குப்பிடி போட்டனர். அதில் 17க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதனால், தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

மேலும் படிக்க | மக்களை துரத்திய அரிசி கொம்பன் யானை... அதிர்ச்சி வீடியோ வெளியீடு - 144 தடை உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

Trending News