குழந்தைகளை பாதிக்கும் பெற்றோர்களின் 4 கெட்ட பழக்கங்கள்

பெற்றோர்களிடம் இருக்கும் இந்த 4 கெட்டப்பழக்கங்கள் குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அவற்றை உடனே திருத்த முயற்சி செய்யுங்கள்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 27, 2022, 04:04 PM IST
குழந்தைகளை பாதிக்கும் பெற்றோர்களின் 4 கெட்ட பழக்கங்கள் title=

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கான மிகப்பெரிய பொறுப்பு. அதில் நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் தவறுகள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். இதனை சில பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே குழந்தை வளர்ப்பில் சில தவறுகளை செய்கிறார்கள்.

8 வயதிற்குள் குழந்தைகளின் கற்றல் திறன்  என்பது மிகவேகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அவர்களின் மனநிலை உருவாக்கும். இந்த ஆண்டுகளில் பெற்றோர்கள் அவர்கள் முன் சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும். 

தவறான வார்த்தை

குழந்தைகள் முன் கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. அதிலும் அவர்கள் முன் ஆபாச வார்த்தைகளைப் பேசக்கூடாது. இவை மிக மிக முக்கியமான விஷயம். அவதூறு, ஆபாச வார்த்தைகள், அவமதித்தல் போன்ற விஷயங்களை அவர்கள் முன் நீங்கள் பேசும்போது, அவை அப்படியே பிஞ்சு குழந்தைகளின் மனதில் பதிந்துவிடும். குழந்தைகளும் அப்படி நடந்து கொள்ள முற்படுவார்கள். 

குழந்தைகள் முன் மது அருந்தாதீர்கள்

குழந்தைகள் முன்பு பெற்றோராகிய நீங்கள் மது அருந்தக் கூடாது. இது மிகப்பெரிய தவறு. குழந்தைகள் வளர வளர, அவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, சிறு வயதிலேயே குடிக்கத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் செய்யும் சிறிய தவறு அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். 

மேலும் படிக்க | பெண்களின் டாப் சீக்ரெட் இதோ! இந்த பசங்களை மிகவும் பிடிக்குமாம்

போன் பயன்படுத்த வேண்டாம்

குழந்தைகள் முன்பு சாப்பிடும்போது போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், வளரும்போது அவர்களை கண்டிக்கும்போது அதனை கேட்கமாட்டார்கள். மாறாக உதாசினப்படுத்திவிடுவார்கள். போன் வேண்டும் அல்லது தொலைக்காட்சி பார்ப்பேன் என பிடிவாதமாக இருப்பார்கள். அந்தநேரத்தில் அவர்களை திட்டியோ அல்லது குறை சொல்லியோ பயனில்லை. 

புரளி பேசக்கூடாது

பெரும்பாலும் பெண்கள் ஒன்றாக உட்கார்ந்தால், அவர்கள் தங்கள் அண்டை வீட்டாரைப் பற்றி புரளி பேசுவார்கள். அப்படி புரளி பேசுவதை தவிர்ப்பது நல்லது. குறைந்தபட்சம் குழந்தைகள் இல்லாமல் இருப்பதையாவது உறுதி செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் மற்றவர்களைப் பற்றி என்ன பேசுகிறீர்களோ, அதனடிப்படையில் அவர்கள் பிறரை அணுகத் தொடங்குவார்கள். இதுவும் ஆபத்தான விஷயம். 

(சிறப்பு குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. Zee உத்தரவாதம் அளிக்காது. எங்களின் நோக்கம் உங்களுக்குத் தெரிவிப்பது மட்டுமே.)

மேலும் படிக்க | ஜிம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை: வேகவைத்த முட்டையை அதிகமா சாப்பிட்டால் ஆபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News