PAN card for children:குழந்தைகளுக்கான பான் கார்ட், விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை இதோ

PAN Card for Children: 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 12, 2023, 04:38 PM IST
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு நீங்கள் ஒரு ரசீது எண்ணைப் பெறுவீர்கள்.
  • அதை உங்கள் குழந்தையின் பான் கார்டு விண்ணப்பத்தின் நிலையை கண்டறிய பயன்படுத்தலாம்.
  • பொதுவாக வெற்றிகரமான சரிபார்ப்பைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் நீங்கள் வழங்கிய முகவரிக்கு பான் அட்டை வந்து சேரும்.
PAN card for children:குழந்தைகளுக்கான பான் கார்ட், விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை இதோ title=

புதுடெல்லி: பான் அட்டை இந்தியாவில் ஒரு மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகின்றது. ஒருவருக்கு 18 வயது ஆனதும், அந்த நபர் வங்கிக் கணக்கைத் திறக்கும் வயது என்பதால் அந்த வயதில் பான் அட்டையை உருவாக்கிக்கொள்வது நல்லது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு நீங்கள் ஒரு ரசீது எண்ணைப் பெறுவீர்கள். அதை உங்கள் குழந்தையின் பான் கார்டு விண்ணப்பத்தின் நிலையை கண்டறிய பயன்படுத்தலாம். பொதுவாக வெற்றிகரமான சரிபார்ப்பைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் நீங்கள் வழங்கிய முகவரிக்கு பான் அட்டை வந்து சேரும்.

உங்கள் குழந்தைக்கு பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்: 

ஸ்டெப் 1: நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.

ஸ்டெப் 2: தேவையான விவரங்களை உள்ளிடவும்.

ஸ்டெப் 3: சிறார்களுக்கான பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான கேடகரியைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?

ஸ்டெப் 4: பான் கார்டு பதிவுக் கட்டணமாக ரூபாய் 107 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

PAN

உங்கள் குழந்தைகளுக்கான பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியல் இதோ

- குழந்தையின் பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று தேவைப்படும்

- விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றும் தேவைப்படும்.

- குழந்தையின் பாதுகாவலர் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் ஐடி ஆகியவற்றை அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கலாம்.

- ஆதார் அட்டை, தபால் அலுவலக பாஸ்புக், சொத்து பதிவு ஆவணம் அல்லது அசல் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவை முகவரி சான்றாக செயல்படும்.

வங்கிக் கணக்கு, டிமேட் கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல், சொத்து வாங்குதல், பத்திரங்களில் முதலீடு செய்தல் மற்றும் அரசு வழங்கும் நிதி வசதிகள் போன்றவற்றுக்கு பான் கார்டு அவசியமாகும். இந்த ஆவணம் சரியான அடையாளச் சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | PAN Link: 2023 மார்ச் மாதத்திற்குள் ஆதாருடன் பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News