Relationship Tips: மண வாழ்க்கை முறிவுக்கு காரணமான ’அந்த’ 3 தவறுகளை செய்யாதீர்கள்

மண வாழ்க்கையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு 3 விஷயங்கள் மட்டுமே காரணமாக இருக்கின்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 28, 2022, 01:40 PM IST
  • மண வாழ்க்கை முறிவுக்கான முக்கிய காரணங்கள்
  • ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இந்த தவறை செய்யக்கூடாது
  • மண முறிவுகளை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
Relationship Tips: மண வாழ்க்கை முறிவுக்கு காரணமான ’அந்த’ 3 தவறுகளை செய்யாதீர்கள் title=

நீங்கள் காதல் வாழ்க்கையிலோ அல்லது திருமண வாழ்க்கையிலோ இருக்கலாம். இதில் எந்த வாழ்க்கையில் இருந்தாலும் இருவருக்கு இடையே சிறு சிறு சண்டைகளும், உரசல்களும் ஏற்படும். அதில் உறவை முறித்துக் கொள்ள யாரேனும் ஒருவர் தயராகக்கூட இருப்பார்கள். சிறு சண்டையில் புரிதல் இல்லாமல் வளரும் வாக்குவாதங்கள் தான் பல மண முறிவுகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்கின்றன. 

மேலும் படிக்க | பெண்களின் டாப் சீக்ரெட் இதோ! இந்த பசங்களை மிகவும் பிடிக்குமாம்

இத்தகைய அசாதாரண முறிவுகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் கட்டாயம் 3 விஷயங்களை தவிர்த்தே ஆக வேண்டும். அதில் ஆண் - பெண் வேறுபாடுகள் எல்லாம் இல்லை. காதல் வாழ்க்கை அல்லது மண வாழ்க்கையைப் பொறுத்த வரை இருவருக்கும் சரி பங்கு உண்டு. 

ஏமாற்றுதல்

பார்ட்னருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விசுவாசமாக இருந்தால் மட்டுமே உறவு முறை சிக்கல் இல்லாமல் செல்லும். ஒருவரை ஏமாற்ற செய்யும் தகிடுதத்தங்கள், மற்றொருவருக்கு கடும் அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். பழிவாங்குவதற்காக அதேபோன்றதொரு தவறை செய்ய சிலர் முற்படுவார்கள். சிலர் அவர்களைவிட்டு செல்ல முடிவெடுத்துவிடுவார்கள். இவையெல்லாம் உங்கள் அமைதியான வாழ்க்கையை சீர்குலைத்துவிடும். 

மேலும் படிக்க | குழந்தைகளை பாதிக்கும் பெற்றோர்களின் 4 கெட்ட பழக்கங்கள்

நேரம் ஒதுக்குங்கள்

பார்ட்னருக்கு நேரம் ஒதுக்க வேண்டும். மனைவி மற்றும் காதலி அல்லது கணவன் அல்லது காதலன் என யாராக இருந்தாலும் தங்கள் பார்ட்னருக்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். இதைத்தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். தங்களின் ஆசைகள், எண்ண ஓட்டங்கள், எதிர்கொள்ளும் சிக்கல்கள், மகிழ்ச்சியான தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது, அதற்கான நேரம் நீங்கள் ஒதுக்கவில்லை என்றால் ஏமாற்றத்தை விரும்புவார்கள். வெறுப்பு உண்டாகும். இதனை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். 
 
பொய் சொல்லக்கூடாது

பொய் சொல்வது உறவில் கூடாத ஒன்று. ஜாலியாக சொல்ல ஆரம்பித்த பொய்கள், இருவருக்கும் இடையில் சந்தேகத்தை உருவாக்கி பின்னாளில் எழும் பெரும் பிரச்சனைக்கு தொடக்க புள்ளியாகக்கூட ஒரு சிறிய பொய் மாறிவிடும். நீங்கள் எதிர்பார்க்காத விளைவுகளையெல்லாம் ஒரு பொய் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும். ஒருநாள் இல்லையென்றாலும், ஏதாவதொரு நாள் பொய் அம்பலமாகிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். 
 
இந்த தவறை நீங்கள் தவிர்த்தவிட்டால், மண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News