நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
நவராத்திரி இன்றைய சிறப்பு:-
அம்பாள்: மஹேஷ்வரி
கோலம்: அரிசி மாவால் கோலம் போட வேண்டும்,
மலர்கள்: மல்லிகை
நெய் வேத்தியம் : வென் பொங்கல்.
பூஜை நேரம்: காலை, 09:15 - 10:15 மணி வரை; மாலை 4:45 - 5:45 மணி வரை.