மகா சிவராத்திரி 2018: பூஜை விவரம், நேரம் மற்றும் விதிமுறை!

மகா சிவராத்திரி 2018-ன் பூஜை செய்யும் விதம், நேரம் மற்றும் என்னவெல்லாம் சிவராத்திரியன்று செயாக்க கூடாது என்ற விவரங்கள் உள்ளே! 

Last Updated : Feb 12, 2018, 11:46 AM IST
மகா சிவராத்திரி 2018: பூஜை விவரம், நேரம் மற்றும் விதிமுறை! title=

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. இதில் நாம் சிலவற்றை செய்யகுடாது என்ற விதிமுறைகளும் உண்டு. சிவராத்திரியன்று, நாம் இரவு முழுக்க கண் விழித்து சிவபெருமானின் துதிகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது ஐதீகம். 

மகா சிவராத்திரி துவங்கும் நேரம்:- சதுர்தஷி திதி பிப்ரவரி 13 அன்று 10:34 பிற்பகல் தொடங்கி பிப்ரவரி 15-ந் தேதி 12:46 முற்பகல் முடிவடைகிறது.

மகா சிவராத்திரி பூஜை நேரம்:- இந்த ஆண்டு, நிஷிதா கால் பூஜை நேரம் 12:09 am முதல் 01:01 மணி வரை. பூஜை காலம் 51 நிமிடங்களுக்கு மேல்.

மகா சிவராத்திரி பரிகார பூஜை நேரம்: 7:04 AM முதல் 3:20 மணி வரை. 

முதல் பரிகார பூஜா நேரம் = 6:05 PM முதல் 9:20 PM (பிப்ரவரி 13)

இரண்டாம் பரிகார பூஜா நேரம் = 9:20 மணி முதல் 12:35 மணி வரை.

மூன்றாம் பரிகார பூஜா நேரம் = 12.25 மணி முதல் 3.49 மணி வரை.

நான்காவது பரிகார பூஜா நேரம் = 3.49 AM முதல் 7.04 AM.

முதல் ஜாமத்தில்:- சிவ பெருமானுக்கு பஞ்ச காவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், அத்தாமரை அலங்காரம் செய்து அர்ச்சனை செய்யவேண்டும். 

இரண்டாம் ஜாமத்தில்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்தம் மற்றும் வில்வ அர்ச்சனை செய்து வணக்க வேண்டும். 

மூன்றாம் ஜாமத்தில்:- தேன், பச்சை கற்பூரம், மல்லிகை அலங்காரம், எள் அன்னம் நிவேதம் படைத்து அர்ச்சனை செய்யவேண்டும்.

நான்காம் ஜாமத்தில்:- கரும்பு சாறு, நந்தியாவட்டை மலர், அல்லி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியன்று செய்ய வேண்டியவை:-

  • கோமியம் தெளித்து வீட்டை சுத்தம் செய்து; நாமும் குளித்து முடித்து வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.  
  • சிவலிங்கத்தை சுத்தமான நீரில் பூஜை செய்து அலங்காரம் செய்ய வேண்டும். 
  • அபிஷேகம் செய்யும் போது "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 
  • பிரசாதமாக சுத்தமான சாம்பலை பயன்படுத்த வேண்டும். 
  • சிவலிங்கத்தை அலங்காரம் செய்தவுடன் அதன் முன்பு 108 சிவலிங்கத்தின் மந்திரத்தை கூற வண்டும்.  

மகா சிவராத்திரியன்று செய்ய கூடாதவை: 

சிவராத்திரியன்று செய்ய கூடாத ஒன்று தூங்கக்கூடாது மற்றும் உணவு உண்ணகூடாது. 

உச்சரிக்க வேண்டிய மந்திரம்:

ஓம் நமச்சிவாய!

சிவாயநம!

மந்திரம் கூறும் முறை:- ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்குமமாகிவிடுகிறது. 

பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.

மந்திரம் சூக்குமம் ஆகும் போது மாத்திரை குறைந்து விடுகிறது. உச்சரிப்பதற்கு எளிதாகி விடுகிறது. பிராணாயாமம் பயிலும் போது குரு சாதகனுக்கு ஏற்றவாறு இந்த மந்திரங்களை மாற்றித் தருவார். எந்தெந்த சாதகனுக்கு எத்தகைய பிராணாயாமம், அதற்கேற்ற மந்திரங்கள் எது என்பதை குருவே தீர்மானிக்க வேண்டும். மற்றபடி பக்தியில் திளைத்திருப்பவர்கள் ஓம்நமசிவாய என்ற மந்திரத்தை வேண்டியவாறு உச்சரிக்கலாம். 

''நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாய'' என்ற வரிகளுக்கிணங்க பஞ்சாட்சரத்தை எவ்வாறு வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். பக்தி என்ற விஷயத்தைப் பொறுத்தவரை இல்லறத்தான் என்றோ, துறவரத்தான் என்றோ பாகுபாடு ஏதும் இல்லை. 

குருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராத போது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது.

Trending News