LIC IPO: மே 17 அன்று பை, செல், ஹோல்ட்? செய்ய வேண்டியது என்ன, நிபுணர்கள் கருத்து

LIC IPO Listing: நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் ஒதுக்கீடு முடிவடைந்து, மே 17 செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தையில் பங்கு விற்பனைக்கு பட்டியலிடப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2022, 11:26 AM IST
  • நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் ஒதுக்கீடு முடிவடைந்தது.
  • மே 17 செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தையில் பங்கு விற்பனைக்கு பட்டியலிடப்படும்.
  • எல்ஐசி லிஸ்டிங் டே வியூகம் என்னவாக இருக்க வேண்டும்?
LIC IPO: மே 17 அன்று பை, செல், ஹோல்ட்? செய்ய வேண்டியது என்ன, நிபுணர்கள் கருத்து title=

எல்ஐசி லிஸ்டிங் டே வியூகம்: நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் ஒதுக்கீடு முடிவடைந்து, மே 17 செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தையில் பங்கு விற்பனைக்கு பட்டியலிடப்படும். 6 நாட்கள் திறந்திருந்த இந்த வெளியீட்டிற்கு முதலீட்டாளர்கள் 2.95 மடங்கு சந்தா செலுத்தியுள்ளனர். 

எனினும், லிஸ்டிங் நாளில் எந்த வகையான உத்தியைக் கடைப்பிடிப்பது என்பதில் முதலீட்டாளர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். வெள்ளிக்கிழமை, கிரே மார்கெட்டில் எல்ஐசி பங்கின் விலை வெளியீட்டு விலையான ரூ.949-இல் இருந்து ரூ.9 டிஸ்கவுண்டில், அதாவது குறைந்து, ரூ.940 ஆக இருந்தது. இதனால் முதலீட்டாளர்களின் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

எல்ஐசியின் ஐபிஓ-விற்கு, அரசாங்கம் ஒரு பங்கின் விலையை ரூ.902-949 வரை வைத்திருந்தது. இறுதி வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தள்ளுபடி காரணமாக, எல்ஐசி பாலிசிதாரர்கள் இந்தப் பங்குகளை ரூ.889க்கும், சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.904க்கும் பெறுவார்கள். சந்தை ஆய்வாளர்கள் இது குறித்த குழப்பான மனநிலையிலேயே இன்னும் உள்ளனர். சில நிபுணர்களின் கூற்றுப்படி, எல்ஐசியின் பங்குகள் 10 சதவீத பிரீமியத்தில் பட்டியலிடப்படலாம். சிலர் குறைந்த விலையில் பட்டியலிடுவதற்கான சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க | LIC IPO: உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? எப்படி பார்ப்பது, விலை என்ன? இதோ விவரம் 

எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டவுடன் உங்கள் உத்தி என்னவாக இருக்க வேண்டும்? சில நிபுணர்களின் கருத்து:
- சந்தையில் கூர்மையான ஏற்ற இறக்கத்தின் விளைவை எல்ஐசியின் லிஸ்டிங்கிலும் காணலாம் என்று சந்தை நிபுணர்கள்  நம்புகின்றனர். 

- எல்ஐசி-யின் பங்குகள் தள்ளுபடியில் பட்டியலிடப்படலாம், முதலீட்டாளர்கள் லிஸ்டிங் ஆதாயத்தைப் பெற வாய்ப்பில்லை என்பது சிலரது கருத்தாக உள்ளது. இருப்பினும், பாலிசிதாரர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் பங்குகளை தள்ளுபடியில் பெற்றிருந்தால், அவர்கள் லிஸ்டிங் ஆதாயத்தைப் பெறலாம்.

- வெளியீட்டு விலையை விட 5-10 சதவீத பிரீமியத்தில் எல்ஐசி பட்டியலிடப்படலாம் என்றும் சிலர் நம்புகிறார்கள். எல்ஐசி பங்குகள் வெளியீட்டு விலையை ஒட்டி பட்டியலிடப்பட்டால், அது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கும்.

- எல்ஐசியின் ஐபிஓவில் நேர்மறை மற்றும் எதிர்மறை போக்கு இரண்டும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், பட்டியலுக்குப் பிறகு வணிகச் சூழல் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப மேலும் உத்திகளை உருவாக்க வேண்டும்.

- சந்தை நிலையற்றதாக இருந்தால், எல்ஐசி பங்குகள் குறைந்த விலையில் பட்டியலிடப்படலாம் என்று சில நிபுணர்கள் நம்புகிறார்கள். இன்சூரன்ஸ் வணிகம் என்பது நிலையான துறை என்பதால், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு இதில் முதலீடு செய்யலாம். 

நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ
எல்ஐசியின் ரூ.21 ஆயிரம் கோடி பொது பங்கு வெளியீடு நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆகும். இதற்கு முன் இந்த சாதனை பேடிஎம்-ன் பெயரில் இருந்தது.எல்ஐசியின் ஐபிஓ மூலம் அரசு தனது பங்குகளை 3.5 சதவீதம் குறைத்துள்ளது.

மேலும் படிக்க | அதிர்ச்சியில் LIC IPO முதலீட்டாளர்கள்: ஜிஎம்பி விலை 90% சரிவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News