கன்னிகாதானம் என்றால் என்ன?

திருமணச் சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வு கன்னிகாதனம். திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் அவரது பெண்ணை மற்றொரு குடும்பத்தில் அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்னிகாதானம் என்று போற்றுகிறார்கள்.

Last Updated : Nov 27, 2017, 02:03 PM IST
கன்னிகாதானம் என்றால் என்ன? title=

திருமணச் சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வு கன்னிகாதனம். திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் அவரது பெண்ணை மற்றொரு குடும்பத்தில் அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்னிகாதானம் என்று போற்றுகிறார்கள்.

திருமணத்தில் கன்னிகாதானம் செய்யும் போது மந்திரங்கள் உச்சரிப்புடன் செய்வார்கள். அதற்க்கு என்ன அர்த்தம் என்றால், கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகா தானத்தைச் செய்கிறேன் என்பது மந்திரத்தின் அர்த்தம்.

மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரை வார்க்க, தந்தையார் மணமகனின் கரங்களில் ஒப்படைப்பர். அப்போது மணமகன், பெண்ணை தானம் எடுப்பார்.

Trending News