திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அங்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அக்கோயிலில் சித்த மருத்துவமனையும் செயல்படுகிறது. இந்தச் சூழலில் அம்மருத்துவமனையில் மனநல மருத்துவர், செவிலியர்,பாதுகாவலர் உள்ளிட்ட 14 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் (ஜூன்) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: மன நல மருத்துவர் (1)
கல்வித் தகுதி: MBBS and Diploma in Psychiatrist medicine
ஊதியம்: ரூ 20,000
பணி:மருத்துவ அலுவலர் (1)
கல்வித் தகுதி : எம்பிபிஎஸ்
ஊதியம்: ரூ. 25,000
பணி: செவிலியர் (2)
கல்வித் தகுதி : நர்சிங்கில் டிப்ளோமா
ஊதியம்: ரூ 18,000
பணி: இல்ல காப்பாளர் (1)
கல்வித் தகுதி : Degree in Master of Social welfare
ஊதியம் : ரூ. 25,000
பணி: சமூகப் பணியாளர் (2)
கல்வித் தகுதி : Degree in Bachelor of Social welfare
ஊதியம் : ரூ. 18,000
மேலும் படிக்க | டிரைவிங் லைசென்சில் புதிய மாற்றம்! முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!
பணி: பராமரிப்பு உதவியாளர் (4)
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு
ஊதியம் : ரூ 10,000
பணி: தொழிற் பயிற்சியாளர் (1)
கல்வித் தகுதி : தொழிற்படிப்புகளில் இளங்கலை பட்டப்படிப்பு
ஊதியம் : ரூ. 12,000
பணி: பாதுகாவலர் (2)
கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : ரூ. 9,000
வயது தகுதி : 18 வயது முதல் 35 வயதுவரை
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் அதிகரிக்கிறது ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன்,இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe